Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குகேஷ் வெற்றிக்கு வழிகாட்டிய 3 புத்தகங்கள்! யார் இந்த யோசனன் அஃபெக் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் வீரர் குகேஷ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இரண்டு புத்தகங்கள் பற்றிய விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார். அது வளரும் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 18ஆவது 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ். அவரைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறார். இந்த விருதை அவர் பெற்றதன் மூலம் இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

gukesh dommaraju chennai

குகேஷ் பிறந்து வளர்ந்தது முழுக்க சென்னைதான். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் வீட்டில் குகேஷுக்கு என்று தனி அறை ஒன்று உள்ளது. இந்த அறை மிகப் பெரிய ஆடம்பரமாக இல்லை எனினும் ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் உள்ள வசதியைவிட அதிகமாகவே இருக்கிறது. அவரது அறையில் அவர் படிப்பதற்கான மற்றும் விளையாடுவதற்கான பகுதியும் கூடவே தூங்குவதற்கான தனி பகுதியும் உள்ளது.

இவர் அறையில் புத்தகங்களை அடுக்க ஒரு அலமாரி உள்ளது. மேலும் அவர் சில காலமாகப் பயன்படுத்தாத ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. சில நேரங்களில் அவரது தந்தை அதனைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தற்போது லேப் டாப் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது மேசையின் மீது ஒரு செஸ் போர்டு உள்ளது. அதில் தான் விளையாடிப் பழகிவருவதாக குகேஷ் குறிப்பிட்டுள்ளார். அறையில் மேலே உள்ள கபோர்டுகளில் குகேஷ் பெற்ற விருதுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

செஸ் வீரர் குகேஷ் செஸ்பேஸ் இந்தியா சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் அவரது வெற்றிக்கு உதவிய சில புத்தகங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். Jan Markos எழுதிய Under the Surface என்ற புத்தகமும் Yochanan Afek எழுதிய Practical Chess Beauty ஆகிய இரண்டு புத்தகங்கள்தான் என் வாழ்க்கையை மாற்றின என்றும் குறிப்பிட்டுள்ளார் குகேஷ்.

gukesh dommaraju chennai

இந்த Practical Chess Beauty என்ற நூல் வெறும் விளையாட்டை கற்றுத் தரும் புத்தகம் அல்ல. அது தத்துவார்த்த புரிதலை உண்டாக்கக் கூடியது என அவர் புகழ்ந்துள்ளார்.

யோசனன் அஃபெக் செஸ் விளையாட்டு வீரர். அவர் இஸ்ரேலை சேர்ந்தவர். பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவருக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. யோசனன் அஃபெக் ஒரு இசையமைப்பாளரும் கூட. செஸ் விளையாட்டு பயிற்சியாளராகவும் பல போட்டிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இவர் 2002இல் பாரிஸ் நகரில் நடைபெற்ற சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றவர். இப்படிப் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரரான யோசனன் நூலைக் கொண்டுதான் குகேஷ் இந்தளவுக்கு செஸ் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இந்த நூல்களை தவிர சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு, சாய்னா நேவால், அபிநவ் பிந்த்ரா, உசேன் போல்ட் என பல விளையாட்டு வீரர்களின் புத்தகங்களை அவரது அலமாரியில் வைத்துள்ளார். கிட்டத்தட்ட தன்னிடம் உள்ள பாதியைப் படித்து விட்டேன் எனச் சொல்லும் குகேஷ் எல்லாவற்றையும் இன்னும் படிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

gukesh dommaraju chennai

பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்திருந்தாலும் அபிநவ் பிந்த்ராவின் புத்தகம் தான் தன்னை அதிகம் கவர்ந்தது என்கிறார். மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் இந்த நூல் தனது ஆல் டைம் ஃபேவரைட் என்கிறார் குகேஷ்.

குகேஷ் தனது பள்ளிப் படிப்பு நேரத்தை தவிர அறையில் செஸ் ஆடிப் பழகுவதைச் செய்து வருகிறார். மாலை நேரங்களில் தனது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வெளியே சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார். அவரது அறையைப் பார்க்கும் போது அனைத்து பொருட்களும் ஒழுங்காக வரிசை மாறாமல் இருக்கின்றன. அவரது ஒழுக்கமும் மனமும் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்காக யோகா புத்தகத்தையும் படித்துள்ளார் குகேஷ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+