கையில் கத்தியுடன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மிரட்டல் விடுக்கும் 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி
சென்னை: கையில் கத்தியை வைத்துக் கொண்டு, குத்தி விடுவதாக மிரட்டுகிறது ஒரு சிறுவர் கூட்டம்.. அதுவும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்குத்தான் இந்த பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு வீடியோ வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன்தான் எகிறி எகிறி பேசுகிறான். இருப்பதிலேயே அந்த சிறுவனுக்குத்தான் வயது குறைவு. இன்னும் சொல்லப்போனால் வயசு 14க்கும் கீழேத்தான் இருக்கும்.
பக்கத்தில் இன்னொரு சிறுவன். வயது 17க்கு கீழே இருக்கும். கையில் கத்தியை வைத்துக் கொண்டு, ஆட்டியபடியே இருக்கிறான். சட்டை பட்டனை கழற்றிவிட்டு பின்னால் விட்டுள்ளான். தன்னை ஒரு ரவுடி என்றே அவன் மனதளவில் ஃபிக்ஸ் செய்து கொண்டது அந்த செயல்பாட்டில் எதிரொலிக்கிறது.

3 சிறுவர்கள்
இந்த 2 பேருக்கும் பின்னால் இன்னொரு சிறுவன். அவனுக்கும் 18 வயதுக்கு கீழே இருக்கும். நல்ல வளர்த்தி. அவன் அவ்வப்போது இவர்கள் செய்வதை பார்த்து சிரித்தபடியும், முறைத்தபடியும் பெர்பார்மன்ஸ் காட்டியபடி இருக்கிறான்.

அமைச்சருக்கு நேரடி மிரட்டல்
இதில் வீடியோவில் அதிகமாக பேசியுள்ள அந்த சிறுவன் அமைச்சர் செல்லூர் ராஜுவை பெயர் சொல்லியே மிரட்டுகிறான். தனது ஜாதியை பற்றி செல்லூர் ராஜு கேலி செய்து பேசியதாக அந்த சிறுவன் குற்றம்சாட்டுகிறான். இப்படி பேசக்கூடாது.. திமுகவை பற்றி பேசுங்கள், அதிமுகவை பற்றி பேசிக்கொள்ளுங்கள். எங்கள் ஜாதி பற்றி பேசக்கூடாது என அமைச்சரையே ஒருமையில் விளித்து, எச்சரிக்கிறான் அந்த சிறுவன்.

பள்ளி மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்தான் எனது சொந்த ஊர் என்றும் தில்லாக அட்ரஸ் கொடுக்கிறான் அந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவருமே பள்ளி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் பேசக்கூடிய இடம் ஏதோ வீடு மாதிரித்தான் தெரிகிறது. வீட்டின் சமையலறையில் நின்றபடி அவர்களேத்தான் இந்த வீடியோவை ஷூட் செய்துள்ளனர்.

பயம் போச்சு
சிறுவர்கள் மத்தியிலும், ஜாதி வெறி எந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதையும், காவல்துறை மீதான அச்சம் குறைந்து கொண்டு செல்கிறது என்பதையும் சமீபத்தில் பல சம்பவங்கள் நமக்கு காட்டுகிறது. இதுவும் அதேபோன்ற ஒரு சம்பவமாகத்தான் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications