3 பேர் கொடுத்த ஐடியா.. அரசகுமாரை கொக்கி போட்டு தூக்கிய ஸ்டாலின்.. யார் ஆடிய கேம்?
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் பாஜகவில் இருந்து விலகிவிட்டு திமுகவில் இணைந்ததற்கு பின் 3 பேரின் முக்கிய அழுத்தம் காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
சென்னை: பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் பாஜகவில் இருந்து விலகிவிட்டு திமுகவில் இணைந்ததற்கு பின் 3 பேரின் முக்கிய அழுத்தம் காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த புதுக்கோட்டை திருமண விழாவில் திமுகவை புகழ்ந்து பேசினார். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆவார். அவருக்கு அதற்கான தகுதிகள் உள்ளது என்று அரசகுமார் குறிப்பிட்டார்.
இது பாஜகவினரை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் அரசகுமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

மாறினார்
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் பாஜகவில் இருந்து விலகிவிட்டு திமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் திமுகவில் இருந்து மூன்று முக்கியமான நபர்கள் ஸ்டாலின் சார்பாக அரசகுமாரிடம் தூது சென்றுள்ளார். இவர்கள்தான் அரசகுமாரிடம் பேசி அவரை மீண்டும் திமுகவிற்கு வர வைத்துள்ளனர்.

என்ன பேட்டி
இது தொடர்பாக அவரே பேட்டியில் விளக்கி உள்ளார். அதில், எங்கள் குடும்ப விழாவில் நான் பேசியதை வைத்து பெரிய சர்ச்சையாகி மாற்றி உள்ளார். இப்போது நான் எனது தாய் இல்லத்தில் என்னை இப்போது இணைத்துக் கொண்டு இருக்கிறேன். உண்மையை, யதார்த்ததை, நடைமுறையை பேசியதற்காக என்னை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மோசம்
காதால் கேட்க முடியாததை எல்லாம், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தினார். அந்த சூழல் எனக்கு பெரிய மன சோர்வை தந்தது. அப்போது தளபதி ஸ்டாலினின் அன்பு எனக்கு கரம்கொடுத்தது. அண்ணன் முன்னாள் அமைச்சர் ரகுபதி , சகோதரர் பெரியண்ணன் அரசு, சகோதரர் செல்ல பாண்டியன் ஆகியோரும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

மூன்று பேர்
இவர்கள் என்னை திமுகவில் சேர சொன்னார்கள். புதுக்கோட்டை திமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் என்னை உடனே மீண்டும் திமுகவிற்கு வரும்படி கூறினார்கள். இதற்கு மேலும் நீங்கள் காத்திருக்க வேண்டாம். உங்களுக்கான இடம் அது கிடையாது என்று குறிப்பிட்டார்கள்.

கோரிக்கை
அவர்களின் கருத்தும் கோரிக்கையும் எங்களுக்கு பிடித்து இருந்தது. அதனால் நான் திமுகவில் இணைந்தேன். நான் திமுகவில் மீண்டும் இணைவதற்கு அவர்கள்தான் காரணம் என்று அரசகுமார் குறிப்பிட்டுள்ளார். அரசகுமார் ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான்.

யார் இவர்கள்
இந்த நிலையில் திமுகவின் மூன்று முக்கிய தலைவர்களான ரகுபதி, பெரியண்ணன் அரசு, செல்ல பாண்டியன் ஆகியோர் கொடுத்த ஐடியாவில் மூலம்தான் இவர் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். வெறும் 3 நாட்களில் இத்தனை திருப்பங்கள் நடந்து , ஆலோசனை நடந்து அவர் திமுகவில் இணைந்து இருக்கிறார் என்கிறார்கள்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்












Click it and Unblock the Notifications