அடியோடு மொத்தமா மாறுது! இது நடந்தா எல்லாமே மாறுமே.. தமிழ்நாட்டில் நடக்க போகும் 3 முக்கிய சம்பவங்கள்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும் என்றும் முக்கிய விஷயங்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.

2. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
3. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் முடிவுகள் வந்ததும் திமுகவில் 2 முக்கியமான மாற்றங்கள் இருக்கும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு எங்கிருந்து இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் அந்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இரண்டாவது மாற்றம்: சில இடங்களில் சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். சில புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆகும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.
உதயநிதி ஸ்டாலின் ப்ரோமோஷன்: உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அமைச்சர் பதவியில் இருந்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
பெரும்பாலும் ரிசல்ட் வந்ததும் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications