Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹாட்ரிக்".. டோட்டலா காலி செய்ய ரெடியாகும் பாஜக?.. இந்த 2 இடங்கள்தான் குறி.. உற்று கவனிக்கும் திமுக

தமிழ்நாடு, கர்நாடகம் இரு மாநிலங்களிலும் பாஜக கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடமாநிலங்களில் இழந்து வரும் செல்வாக்கை, தென்மாநிலங்களில் ஈடுகட்ட பாஜக முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், குஜராத் மற்றும் தமிழகத்தில், தேசிய பாஜகவின் கவனம் கூடிக் கொண்டு வருகிறதாம்.

சில மாதங்களுக்கு முன்பு, அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. "அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

பாஜகவை பொறுத்தவரை, தென்மாநிலங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை இன்றுவரை பெற முடியாமல் உள்ளது.. இதற்கு முக்கிய காரணம், பாஜகவுக்கு சீட் ஒதுக்கீடுகள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்கிறார்கள்.

 நிதிஷ்

நிதிஷ்

ஆனால், இப்போது சிக்கல் என்னவென்றால், வடமாநிலங்களிலும், சில சறுக்கல்களை பாஜக சந்தித்து வருகிறது.. பீகாரில் நிதிஷ்குமாருடன் முட்டிக்கொண்டுவிட்டதால், நிதிஷ் + தேஜஸ்வி ஒன்று சேர்ந்துவிட்டதால் பாஜகவுக்கான முக்கியத்துவம் அங்கு குறைந்து விட்டதாகவே சொல்கிறார்கள். அதேபோல, மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டாலும், உத்தவ் தாக்கரேவுடன் இவ்வளவு நடந்தும், சிவசேனா + பாஜக கைகோர்க்குமா? என்பதை அப்போதே பலர் சந்தேகங்களை எழுப்பினார்கள்.

அகிலேஷ்

அகிலேஷ்

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட பீகார் போலவே பாணியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. காரணம், நிதிஷ்குமார் + அகிலேஷ் யாதவ் போட்டோக்களை இணைத்து வைத்து 2 மாதங்களுக்கு முன்பேயே போஸ்டர்கள் அங்கு பரபரத்தன.. ஆக, பாஜக இத்தனை காலமும் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த இந்த 3 பிரதான மாநிலங்களிலும் ஆட்டம் காண துவங்கி விட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதனால்தான், தன்னுடைய கவனத்தை இந்த முறை தென்மாநிலங்கள் பக்கம் திருப்பி வருவதாகவே தெரிகிறது..

 சர்வே சேஞ்ச்

சர்வே சேஞ்ச்

இந்த 3 மாநிலங்களிலும் இழந்த செல்வாக்கை, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஈடுகட்ட நினைப்பதாக சொல்கிறார்கள். இதில், கர்நாடகம் தவிர, எந்த மாநிலத்திலும் பாஜக நுழைவது எளிதான காரியம் இல்லை. ஆனால், அதே கர்நாடகத்தில் இன்றைய நிலைமை மாறியிருப்பதுடன், காங்கிரஸ் ஆதரவு அலை பெருகி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கு காரணம், பாஜக சார்பிலேயே ஒரு சர்வே தற்போது மேற்கொள்ளப்பட்டது... இந்த சர்வே முடிவில், 224 தொகுதிகளில், 70 இடங்களுக்குள் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று அந்த ரிப்போர்ட் வந்துள்ளதாம்..

 கைகோர்க்குமா?

கைகோர்க்குமா?

அதுமட்டுமல்ல, ஹிஜாப் விவகாரம், கல்விப்பாடத்திட்டங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள், ஒப்பந்தக்காரர்கள் தற்கொலை என நெருக்கடிகள் கூடி வருவதுடன், மதம்சார்ந்த பிரச்சனைகளும், போராட்டங்களும் வெடித்து வருவதும் பாஜகவுக்கு எதிராக தேர்தலில் அமையலாம் என்கிறார்கள்.. மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் பாஜக கைகோர்க்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று தற்போது முடிவாகிவிட்டது.. அதனால், பாஜக தனித்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதனால் மக்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கையை தயார்செய்ய களமிறங்கி உள்ளது..

 குஜராத் மாடல்

குஜராத் மாடல்

அதேபோல, குஜராத் மாடல் வியூகத்தையும் கையிலெடுக்க போவதாக தெரிகிறது.. சரியாக செயல்படாத முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என யாராக இருந்தாலும் சரி, சரியாக செயல்படாவிட்டால் சீட் கிடையாது, மாறாக புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது, அல்லது செல்வாக்கு மிகுந்த நபர்களை சரியாக தேர்வு செய்து சீட் வழங்குவது என்று பாஜக திட்டமிட்டு வருகிறதாம். இதற்கு அடுத்தபடியாக தமி்ழ்நாட்டை நெருங்கி கொண்டிருக்கிறது பாஜக.. எப்படியாவது 25 தொகுதிகளாவது வென்றுவிட வேண்டும் என்று முனைப்புடனும் களமிறங்கி உள்ளது..

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

காங்கிரசுக்கு மக்களவையில் வெறும் 50க்கும் குறைவான எம்பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தமுறை அந்த எண்ணிக்கைகூட கிடைக்க விடாமல் செய்து, ஹாட்ரிக் வெற்றியை அடைய பாஜக பிளான் செய்து வருகிறதாம்.. காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் பிரதான வெற்றியை பெற்றுவிடக்கூடாது என்பதால்தான், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டிவிடுவதற்கான அழுத்தமும் மறைமுகமாக, பல்வேறு வகைகளில் தரப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அஜெண்டா

அஜெண்டா

மேலும், ஊழல்குற்றச்சாட்டுகள் + திமுகவின் குடும்ப அரசியலை பெரிதுபடுத்தி, அதையே அரசியலாக்கி, திராவிட கட்சிகளை டேமேஜ் செய்வதும், பாஜகவின் முக்கிய அஜெண்டாவாக உள்ளதாம். எப்படியாவது, இந்த முறை தேர்தலிலாவது, காங்கிரஸை திமுக கழட்டிவிடுமா என்று பாஜக எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், அதற்கும் இடம் கொடுக்காமல், ராகுலின் யாத்திரைக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்து, தன் நிலைப்பாட்டை உறுதி செய்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாஜகவுக்கு இது மேலும் கடுப்பை தந்த நிலையில், தமிழகத்தின் மீதான கவனம் பாஜகவுக்கு கூடிஉள்ளதாகவே சொல்கிறார்கள்.. "தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்" என்று சுப்பிரமணிய சாமி அடிக்கடி சொல்லிவரும்நிலையில், எந்த அளவுக்கு அது சாத்தியமாகும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+