கிளாம்பாக்கத்தை விடுங்க! வண்டலூரில் புதுசா ஒன்னு வருதே தெரியுமா! வேலைக்கு செல்ல ரெடியா இருங்க
சென்னை: தமிழகத்தில் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது.
மாநகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியால் அந்த பகுதியின் நில மதிப்பு, வீட்டு வாடகை, கடை வாடகை உள்ளிட்டவை அதிகமாகவே உள்ளன.

முன்பெல்லாம் அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு குடிபெயரவே தயங்கி வந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் வந்ததால் அந்த இடத்தில் தற்போது வாடகைக்கு வீடு கிடைப்பதே அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம்.
எப்போதுமே எந்த பகுதியில் தொழில்கள் அதிகமாக இருக்கிறதோ அந்த இடம் வளர்ச்சி பெறும் என்பது கண்கூடாக பார்த்திருக்கிறோம். தரமணியில் எப்போது டைடல் பார்க் வந்ததோ அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளன. அது போல் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இது தவிர சென்னையில் வெளிவட்ட சாலையில் உள்ள மண்ணிவாக்கம், மலையம்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதற்கட்ட அனுமதியை தந்துள்ளது. நிலமும் தேர்வு செய்யப்பட்டு அதை சரி செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மலையம்பாக்கத்தில் 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ 3 கோடியாகும்.
அது போல் மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இதன் மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ 5 கோடியாகும். அடுத்ததாக வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இதன் மதிப்பு ஏக்கர் ரூ 8 கோடியாகும். இந்த 3 ஐடி பூங்காக்களையும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை பன்முடங்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது கூடுதலாக 3 ஐடி பார்க்குகள் அமைகின்றன. ஐடி பூங்கா அமைக்க நியமிக்கப்பட்ட ஆலோசகர் பணியை தாமதப்படுத்தியதால் அவரை அதிகாரிகள் நீக்கிவிட்டனர்.
சேமிப்பு கிடங்குகளை அமைக்க தமிழக தொழில் மேம்பாட்டு கழகம் 36 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ 70 கோடி முதல் ரூ 75 கோடி வரையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications