"அண்ணி"கிட்ட சொல்லிருங்க.. உருகிய வேல்முருகன்.. கோபாலபுரம் வீட்டு வாசலிலேயே நின்றிருந்த துர்கா..அடடே
கிருத்திகா உதயநிதிக்கு வேல்முருகன் வாழ்த்தும் வணக்கமும் கூறினார்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் பதவியேற்ற நிலையில், 3 பிரமுகர்களின் வாழ்த்துக்கள் பலரது கவனத்தை பெற்று வருகின்றன.. யார் அவர்கள்?
தமிழகத்தின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன... அவர் கோபாலபுரம் இல்லத்தில் பாட்டி தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிறகு, சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கு சென்று ராசாத்தி அம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.. எனினும், 3 பேரின் வாழ்த்துக்கள் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன..

ஆரியமாயை
அந்தவகையில், நடிகை கஸ்தூரி உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. நேற்றைய தினம், சமூக அக்கறையாளரும், துணிச்சல் நிறைந்த பேச்சாளரும், நடிகையுமான கஸ்தூரி ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில், "டிசம்பர் 14, 2022. மிகவும் மங்களகரமான நாள், காலை 9.30 மணி சிறந்த சுப நேரம்.. அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு" என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த ட்வீட் பெரும் வைரலானது..

கஸ்தூரியா
இந்நிலையில், உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் கஸ்தூரி. தமிழக மக்களின் நலனை மனதில் வைத்து பொறுப்பான நேர்மையான அமைச்சராக செயல்பட வாழ்த்துகள் என்று மனம் நிறைந்த வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.. கருத்து வேறுபாடு பல இருந்தாலும், தமிழக அமைச்சருக்கு கஸ்தூரி சொன்ன வாழ்த்து பலரது கவனத்தை பெற்று வருகிறது. அதேபோல, பாஜகவின் காயத்ரி ரகுராமும் வாழ்த்து சொல்லி உள்ளார். "குத்துச்சண்டை வீரர்கள் சண்டைக்கு முன் கையுறைகளைத் தொடுவது "நான் உன்னை மதிக்கிறேன், இது தனிப்பட்ட வெறுப்பு இல்லை, சண்டையின் போது நான் விளையாட்டு வீரராக மட்டுமே இருப்பேன்" என்று பார்க்கிறேன். சண்டை முடிந்ததும், இரண்டு போராளிகள் ஒரே மாதிரியாக சாதாரண மனிதராக வாழ்கின்றனர்.

2 போராளிகள்
ஆனால் அவர்கள் இறுதிவரை போராடுகிறார்கள். சிறந்த ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். இரண்டு போராளிகள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவதற்கான பொதுவான வழியாகும். இது ஆரோக்கியமான குத்துச்சண்டை. அந்த குறிப்பில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.. கடந்த 2 வருட காலமாகவே, திமுகவை சரமாரி விமர்சித்து வருபவர் காயத்ரி ரகுராம். எத்தனையோ முறை, உதயநிதியின் பெயரை குறிப்பிட்டு, கடுமையாக சாடியும் ட்வீட் போட்டு வந்த நிலையில், இன்றைய தினம் காயத்ரியின் வாழ்த்தும் முக்கியத்துவம் பெறுகிறது.

தயாநிதி செம்ம
இந்த வாழ்த்தில் மிக முக்கியமானவர், முக அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி ஆவார்.. உதயநிதி இன்றைய தினம் பதவியேற்றுக்கொள்ளும் போட்டோவை பகிர்ந்து, தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அழகிரி குடும்பத்துக்கும், ஸ்டாலின் குடும்பத்துக்கும் இடையே அரசியல் ரீதியாக சுமூக உறவு இல்லை... கிட்டத்தட்ட அழகிரி ஒதுக்கப்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.. அப்படி இருந்தும், தன் அண்ணன் உதயநிதியை, தயாநிதி வாழ்த்தி இருப்பது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர செய்து வருகிறது.

அண்ணி
பதவியேற்பு முடிந்ததுமே, கூட்டணி தலைவர்கள் பலர் உதயநிதிக்கு வாழ்த்து சொன்னார்கள்.. அந்தவகையில், விசிக எம்பி ரவிக்குமார், உதயநிதியின் கையை பிடித்து வாழ்த்து சொன்னார்.. அதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் மஞ்சள் துண்டுடன் வந்தார்.. உதயநிதி அருகில் கிருத்திகா நின்று கொண்டிருந்தார்.. அப்போது உதயநிதிக்கு பொன்னாடை துண்டு தந்து வாழ்த்து சொன்னார் வேல்முருகன்.. அருகில் நின்றிருந்த கிருத்திகாவிடம், "வணக்கம்ம்மா.. நான்தான் வேல்முருகன்"என்று சொல்லிவிட்டு, "அண்ணிக்கிட்ட சொல்லுங்க.. அவங்களுக்கு தெரியாது" என்றார்.. இதைக்கேட்டு உதயநிதியும், கிருத்திகாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

துர்கா ஸ்டாலின்
பதவியேற்பு முடிந்ததுமே, உதயநிதியின் வருகைக்காக கோபாலபுர வீட்டில் உறவினர்கள் அனைவரும் காத்திருந்தனர்.. துர்கா ஸ்டாலின் வாசலிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டு, மகன் வருகிறாரா என்று பார்த்து கொண்டேயிருந்தார்.. அவருடன் கருணாநிதி மகள் செல்வி, உட்பட உறவினர்கள், சொந்தங்கள், தொண்டர்கள் பலரும் வாசலிலேயே காத்திருந்தனர்.. நீண்ட நேரம் கழித்துதான், முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் கார்கள் வந்து நின்றன.. இன்றைய தினம் உதயநிதியின் பதவியேற்பு என்பதால் கோபாலபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது....!!

கிருத்திகா
முன்னதாக, இன்பநிதி வீடியோ கால் மூலம் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.. ஸ்பெயினில் இருக்கும் இன்பநிதி, வீடியோ கால் மூலம் அமைச்சரான உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. மகனுடன் பேசி முடித்தபிறகு, உதயநிதியை கட்டியணைத்து கிருத்திகாவும் வாழ்த்து சொன்னார்.. இதை அங்கிருந்த குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications