அடிச்சு ஆடுறாங்களே.. சென்னையை அடையாளம் தெரியாமல் மாற்ற போகும்.. 3 பெரிய திட்டமும் ஸ்டார்ட்!
சென்னை: சென்னையை அடையாளம் தெரியாமல் மாற்ற போகும் 3 பெரிய திட்டங்களை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. மூன்றிற்குமான பணிகள் தொடங்கி உள்ளன. அந்த திட்டங்கள் பற்றி இங்கே வரிசையாக பார்க்கலாம்.
திட்டம் 1: சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை பணிகள் காரணமாக இங்கே மொத்தமாக பேரிகேட் போடப்பட உள்ளது. அடுத்த 2 வருடத்திற்கு இங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் இதனால் ஏற்படலாம். மக்கள் இங்கே பயணம் செய்யும் விதம் கடுமையாக பாதிக்கப்படலாம். இந்த திட்டத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
இன்ஜினியரிங் அதிசயம்: இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில் பரபரப்பான அண்ணாசாலையில் 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் பாலங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்தான் நீண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும், மேலும் இது சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். மெட்ரோ சுரங்கத்தை இது பிடிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும்.
திட்டம் 2: லோக்சபா தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட பின் ஜூன் மாதம் முதல் வள்ளுவர் கோட்டம் சாலையில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதனால் அங்கே போக்குவரத்து மொத்தமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 67 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட உள்ளது.
இந்த மாதம் இறுதியில் அங்கே பேரிகேட் போடும் பணிகள் நடக்கும். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அங்கே நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொங்கலுக்குப் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் விட உள்ளது.

அங்கே கட்டப்பட உள்ள நான்கு வழிப்பாதை பாலத்தால் நுங்கம்பாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.
ஜனவரியில் டெண்டர் முடிந்து பணி ஆணை வழங்கப்பட்டால், 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அப்பகுதி மக்களுடன் பொது கலந்தாய்வு நடத்தப்படும். இதனால் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள்: திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்தின் பரப்பளவைக் குறைத்துள்ளோம். சாலையில் உள்ள 37 தனியார் சொத்துகளை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பொது சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு சொத்தின் நிலம் பாலத்திற்காக பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
திட்டம் 3: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. முதல்முறையாக மதுரவாயல் சாலையில் பேரிகேட் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின் அந்த பில்லர்கள் இடிக்கப்படும்.
இன்னொரு பக்கம் இதற்காக தற்போது கூவத்தில் குழிகள் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.

சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது,
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications