Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிட் லிஸ்ட்டில் வந்த பிரபலம்.. எடப்பாடி பந்தை வீசினால், அதை திருப்பி வாங்கி அடிக்கும் ஓபிஎஸ் + திமுக

எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன், சில வியூகங்களை அதிமுகவுக்கு வகுத்து தந்துள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் வேகம் எடுக்கிறார் என்றால், ஓபிஎஸ் அதற்கு மேல் ஸ்பீடு எடுத்து, பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார்.. இவர்களுக்கு நடுவில், திமுக அலர்ட் ஆகி வருகிறது.

90 சதவீதம், தன்னுடைய கைக்குள்ளேயே அதிமுக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வந்தாலும், பொதுச்செயலாளர் என்ற பதவியை அவ்வளவு எளிதாக எட்டிவிட முடியவில்லை.

ஒருபக்கம், பாஜக பூசல் வெடித்து கிளம்ப, மறுபக்கம் திமுக அதிரடிகளை கிளப்ப, ஓபிஎஸ்ஸும் விஸ்வரூபம் எடுத்து வருவது எடப்பாடி தரப்பை லேசாக அதிர செய்தும் வருகிறதாம்.

 சீமான் கூடாரம்

சீமான் கூடாரம்

இப்போதைக்கு மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை அதிமுகவுக்கு கொண்டு வரும் அசைன்மென்ட்களை, முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கி உள்ளார்.. அதன்படி, மாற்று கட்சியினர் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து கொண்டு வருகிறார்கள்.. அமமுகவுக்கு மட்டுமே ஷாக் தந்து கொண்டிருந்த எடப்பாடி, திடீரென நாம் தமிழர் கட்சியிலும் கையை வைத்துள்ளார்.. நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளராக இருந்த கோ. பிரகாஷ் என்பவர்தான், அதிமுகவில் இணைந்துள்ளார்.. தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர் இந்த பிரகாஷ்தான்.. இப்போது எடப்பாடி முன்னிலையில் ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார்..

 கொங்கு ஆபரேஷன்

கொங்கு ஆபரேஷன்

திமுகவுக்கு எதிரான அணியை கட்டமைப்பதில் தீவிரம் காட்டிவரும் எடப்பாடி பழனிசாமி, 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளாராம்.. கொங்குவை மெல்ல மெல்ல திமுக பக்கம் இழந்து வரும் நிலையில், கொங்கு ஆபரேஷன் ஆரம்பமாகி உள்ளதாம்.. அதில் முதல் பந்துதான் நாம் தமிழர் கூடாரத்தின் மீது வீசப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனை திமுக தரப்பும் கவனிக்காமல் இல்லை... அதுமட்டுமல்ல, அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவதாக கூறப்படும்நிலையில், இவைகளை குறைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம் எடப்பாடி.. அப்படி மாற்றம் நிகழும் நிலையில், சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ஏற்கனவே தங்களை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைத்து வருகிறார் என்று சீனியர்கள் பொருமலில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு புது முடிவு அவர்களுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, இதற்கெல்லாம் பின்னணியில் எடப்பாடி மகன் மிதுன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. சில மாதங்களுக்கு முன்புகூட, மிதுனின் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த பேச்சை கிளப்பியது ஓபிஎஸ் அணியினர்தான்... மூத்த தலைவர் மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டி ஒன்றில், பிரசாந்த் கிஷோர் இங்கே திமுகவுக்கு வேலை செய்தாரே அந்த மாதிரி, எடப்பாடிக்கு வேலை செய்த விவிஐயுடன், துணையாக நின்றது யார்? இவர் மகன்தான்..

 ஸ்கூல் யூனிபார்ம்

ஸ்கூல் யூனிபார்ம்

நீங்களே எடப்பாடியிடம் போய் கேளுங்கள், அனைத்து நிர்வாக பொறுப்பும் யாரிடம் தந்துள்ளார் என்று கேட்டு பாருங்கள். ஓபிஎஸ் மகன் யூனிபார்ம் போட்டுட்டு ஸ்கூலுக்கு வருகிறார்.. ஆனால், அதிகாரப்பூர்வமாக இல்லாமல் திரைமறைவில் பின்னின்று மகனை வைத்து இயக்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி... ஆனால், மக்களிடம் நேரடியாக சென்று களத்தில் நின்று போராடி வென்றவர் ஓபிஆர் என்று மருது அழகுராஜ் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடியை சுனில் மூலம், ஒரு பிரபல தேர்தல் நிபுணர் கன்வீன்ஸ் செய்து வருவதாகவும் பகீர்கள் கிளம்பின..

 வெறும் புரளி

வெறும் புரளி

எனினும் அவையெல்லாம் வெறும் புரளியாகவே நொறுங்கிப்போய்விட்டன.. இந்நிலையில், மீண்டும் மிதுனின் பெயர் எடப்பாடி அரசியலுடன் தொடர்புபடுத்தி இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.. சமீபகாலமாகவே, உதயநிதி மீதான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி அள்ளிவீசி டார்கெட் செய்துவரும்நிலையில், மகன் தரும் வியூகங்களையும், திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. ஆனால், இங்குதான் ஓபிஎஸ்ஸின் அரசியல் ஸ்மார்ட்டாக உள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

 சுனில் ப்ளான்

சுனில் ப்ளான்

மாற்று கட்சியில் இருந்து, அதாவது பாஜக, அமமுக போன்ற கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்களை இழுக்க முடிந்த எடப்பாடி பழனிசாமியால் இதுவரை ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரையும் வலைவீசி இழுக்க முடியவில்லையே ஏன்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.. அந்த அளவுக்கு ஓபிஎஸ் டீம் இறங்கியடிக்க தயாராகிவிட்டதென்றும், அதனால்தான், அடுத்தடுத்த போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.. இதற்கெல்லாம் பின்னணியில் ஓபிஎஸ்ஸுக்கு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வகுத்து தரும் வியூகம் பக்க பலமாக இருந்து வருவதாகவே கணிக்கப்படுகிறது..

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு, வியூகங்களை வகுப்பது மிதுன் என்று மறைமுகமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு பண்ருட்டியார் வகுத்து தரும் வியூகங்கள், சிறந்த பலனை பெற்று தருவதாக சொல்கிறார்கள்.. இதன் தாக்கம், ஓபிஎஸ் சார்பில் திருச்சியில் நடத்தப்போகும் மாநாட்டில் எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. இதையும் திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. எடப்பாடி அரசியலை எதிர்கொள்ள ஓபிஎஸ் மும்முரமாகி வரும்நிலையில், திமுகவும் அதற்கேற்றவாறு காய் நகர்த்தலை துவங்கி உள்ளதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+