3 மல்லு நடிகைகள் மந்திரிமார்களுக்கு செக்! திரையிலிருந்து தெருக்களுக்கு வந்த வீணா நாயர்! பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா சட்டசபை தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.. ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.. அந்தவகையில் 3 முக்கிய நடிகைகள் வரப்போகும் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிகிறது.. இந்த செய்திதான் கேரளா முழுக்க பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, ஆளுங்கட்சியான இடதுசாரி முன்னணி முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.. இதில் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், முதல்வர் பினராயி விஜயன் உட்பட 14 அமைச்சர்கள் மீண்டும் அதே பழைய களத்தில் குதிக்கிறார்கள்..

3 mallu actress Actress Veena Nair Kerala Assembly Election 2026 Twenty 20 Party 3 2026

டுவெண்டி டுவெண்டி

இடதுசாரிகள் காட்டும் இந்த வேகம் மற்ற கட்சிகளையும் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது.. பாஜகவும் தன் பங்கிற்கு 47 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு, நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என காட்டியுள்ளது..

இப்படிப்பட்ட சூழலில் தான், பாஜக கூட்டணியில் இருக்கும் "டுவெண்டி டுவெண்டி" கட்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.. மலையாள சினிமாவில் புகழ்பெற்ற 3 நடிகைகளை வேட்பாளர்களாக அறிவித்து, கேரளா அரசியலில் ஒரு புது ரூட்டை பிடித்துள்ளனர்..

வீணா நாயர், அஞ்சலி நாயர், லட்சுமி பிரியா என மூன்று பிரபலங்களும் இப்போது மக்களிடம் ஓட்டு கேட்க தயாராகிவிட்டனர்.. இதில் வீணா நாயர் ஏற்றுமானூர் தொகுதியிலும், அஞ்சலி நாயர் திருப்பூணித்துறாவிலும், லட்சுமி பிரியா பெரும்பாவூர் தொகுதியிலும் மோதுகிறார்கள். திரையில் பார்த்த முகங்களை இப்போது தங்கள் தெருக்களில் பார்க்கப்போகும் ஆவலில் மக்களும் இருக்கிறார்களாம்.

நடிகை வீணா நாயர்

குறிப்பாக நடிகை வீணா நாயர் பேசும்போது, தான் முன்பே அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.. கல்லூரி காலத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பில் இருந்தவர், இப்போது சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் டுவென்டி டுவென்டி கட்சியில் சேர்ந்திருப்பதாக சொல்கிறார்.

ஆக, சினிமாவில் பிஸியாக இருந்தாலும், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களை அரசியலுக்கு இழுத்து வந்திருப்பது ஒரு நல்ல மாற்றமாகத் தெரிகிறது.

திரை நட்சத்திரங்கள்

இப்படி பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இவர்கள் இந்தத் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. வழக்கமான அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு அலுத்துப்போன மக்களுக்கு, இவர்களின் வருகை ஒரு புதுத் தெம்பைக் கொடுக்கலாம்..

குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு, மற்ற பெரிய கட்சிகளின் ஓட்டு வங்கியை பதம் பார்க்கக்கூடும்.. தெரிந்த முகங்கள் என்பதால் மக்களிடம் இவர்களால் எளிதாக பேசிப் பழக முடியும்.. இது அவர்களுக்குப் பெரிய பிளஸ் பாயிண்ட்.

கேரளா தேர்தல்

ஆனாலும் வெறும் பிரபலம் என்பது மட்டுமே வெற்றியை தந்துவிடாது.. மக்கள் இப்போது முன்பை விட மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.. நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்குவதால் அந்த தொகுதிகளில் போட்டி இன்னும் பலமாக இருக்கும்..

மக்களின் அன்றாட பிரச்சனைகளான வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு இவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது என்பதைப் பொறுத்தே இவர்களின் எதிர்காலம் அமையும்.. ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றால், மற்ற கலைஞர்களுக்கும் அரசியலுக்கு வரும் தைரியம் பிறக்கும்.. மொத்தத்தில் இந்த முறை கேரளாவில் பலமான போட்டி நடப்பது மட்டும் உறுதி..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+