3 மெகா கூட்டணி.. 4 முனை தேர்தல்.. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் இப்படித்தான் இருக்க போகுது! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிவால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 4 முனை மோதல் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு தற்போது வலிமையாக இருக்கிறது. இந்தியா கூட்டணி காரணமாக இவர்கள் உறவு மேலும் நெருக்கம் ஆகி உள்ளது. இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்ததே திமுகதான்.

3 Mega alliances and Fight in 4 sides: How will Tamil Nadu Lok Sabha 2024 alliances change?

இந்த கூட்டணி வளர்ச்சி அடைய, மற்ற முக்கியமான கட்சிகள் இந்த கூட்டணியில் சேர மிக முக்கியமான காரணமாக இருந்தது திமுகதான். அதனால் இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு திமுக - காங்கிரஸ் இடையே உறவு விரிசல் ஏற்பட வாய்ப்பே இல்லை.

இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் நெருக்கமாகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் நெருங்கிவிட்டது. கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரஸ் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக சாதகமான வார்த்தைகளையும் கூட கமல்ஹாசன் கூறினார். இதனால் பெரும்பாலும் திமுக + மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் ஒன்றாக களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது போக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. சில தலித் விவகாரங்களில் திமுக + விசிக இடையே மோதல் உள்ளது. இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு உள்ளது. ஆனாலும் இவர்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. ஒரு பேச்சுவார்த்தை மூலம் இவர்கள் இடையிலான உரசலை சரி செய்ய முடியும்.

இன்னொரு பக்கம் சிபிஐ, சிபிஎம் இரண்டுமே திமுகவுடன் நெருக்கமாக உள்ளது. இவர்களுக்கு இடையில் எந்த விதமான உரசலும் இல்லை. அதனால் இந்த கூட்டணி முறிய வாய்ப்பே இல்லை.

இதனால் பெரும்பாலும் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில்: திமுக - காங்கிரஸ் - விசிக - சிபிஐ - சிபிஎம் - மதிமுக - மக்கள் நீதி மய்யம் - கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் - மமகா - ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் சேர்ந்து லோக்சபா தேர்தல் 2024ஐ ஒன்றாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணி: இன்னொரு பக்கம் அதிமுக கட்சி ஒரு சில சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அல்லது நாம் தமிழர் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம். அல்லது திமுகவின் மேற்கண்ட கூட்டணியில் இருந்து கட்சிகளை பிரித்துக்கொண்டு புதிய கூட்டணி அமைக்கலாம்.

இன்னொரு பக்கம் பாஜக வேறு ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில், பாஜக + பாமக + ஓபிஎஸ் + டிடிவி தினகரனின் அமமுக+ புதிய தமிழகம் + தமிழ் மாநில காங்கிரஸ் + ஐஜேகே + தேமுதிக + ஏசி சண்முகத்தின் புதிய தமிழகம் கட்சி ஆகியவை சேர்ந்து கூட்டணி அமைத்து புதிய என்டிஏ கூட்டணியை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்காத பட்சத்தில் தனியாக போட்டியிடலாம். இதனால் திமுக கூட்டணி - என்டிஏ கூட்டணி - அதிமுக - நாம் தமிழர் என்ற நான்கு முனை தேர்தல் லோக்சபா தேர்தலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+