"முறிகிறது அச்சாணி".. அமித்ஷாவே எதிர்பார்க்கலயாமே.. ஆட்டத்தை கலைத்து ஆடும் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற ஆர்வம் எழுந்து வருகிறது
சென்னை: அமித்ஷா, பிரதமர் மோடி இருவரும் தமிழகம் வந்து திரும்பிய நிலையில், 3 விதமான அதிர்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு தந்துள்ளதாகவே தெரிகிறது.. அதுவும் இந்த குறுகிய நாட்களிலேயே..!!!
ஏர்போர்ட்டில் சந்தித்து பேசியபோது, "உங்களை டெல்லியில் சந்திக்க விரும்புகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, நீங்கள் இருவரும் சகோதர உணர்வுடன் வருவதாக இருந்தால், அடுத்த வாரமே சந்திக்கலாம் என்று பிரதமர் மோடி சொன்னராம்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி எதையுமே சொல்லவில்லை என தெரிகிறது.. ஓபிஎஸ்சை இணைப்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பது எடப்பாடிக்கு அப்-செட்தான்..

ஓவர் பிடிவாதம்
எனினும் பாஜக ஆதரவாளர்கள் தரப்பில் தொடர்ந்து எடப்பாடிக்கு அழுத்தம் தரப்பட்டே வருகிறது.. "ஓபிஎஸ் விஷயத்தில், உங்கள் பிடிவாதத்தை டெல்லி ரசிக்கவில்லை. உங்கள் பிடிவாதம் உங்களுக்கும் நல்லதல்ல, அதிமுக - பாஜக கூட்டணி அரசியலுக்கும் நல்லதல்ல என நினைக்கிறார்கள். அதனால், பிடிவாதத்தை தளர்த்துங்கள்" என்று சொன்னதாக தெரிகிறது.. அதையும் எடப்பாடி கேட்கவில்லை.. பிடிவாதத்தை விடவில்லையெனில் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நலன்விரும்பிகள் எடுத்து கூறியுள்ளனர்.

60 எம்எல்ஏக்கள்
எம்பி தேர்தலில் எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார், பாஜகவுடன் ஓபிஎஸ், தினகரன் இருவரும் தனித்தனியாக கூட்டணி அமைப்பார்கள், இதனால்எடப்பாடி இமேஜ் டேமேஜாகும், அவருக்கு எதிரான வழக்கினை வைத்து நெருக்கடி தரப்படும் என்று பலர் சொன்னார்களாம்.. அதையும் எடப்பாடி கேட்கவில்லை. 60 எம்எல்ஏக்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் தன்னை, ஓபிஎஸ்ஸுடன் வரிசையில் நிற்கவைத்துவிட்டார்களே, என்ற வருத்தம் எடப்பாடி தரப்புக்கு உள்ளதாம்... அந்தவகையில், பாஜகவின் அழுத்தத்தை ஏற்பதைவிட, தனித்து போட்டியிடவும் யோசித்து வருவதாக கடந்த 2 நாட்களாகவே செய்திகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன..

ஓபன் அட்டாக்
இப்படிப்பட்ட சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி தந்துள்ள பேட்டி 2 விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது.. மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.. அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என்று டிடிவி ஓபனாக அறிவித்திருந்த நிலையில் எடப்பாடியின் இந்த பேட்டி முதல் ஷாக்கை பாஜகவுக்கு தந்துள்ளது.

சங்கடம் A
இதற்கு அடுத்தபடியாக, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை அழுத்தி சொல்லியுள்ளார் எடப்பாடி.. ஏற்கனவே நாமக்கல்லில் அதிமுக தலைமையில் கூட்டணி என்று அறிவித்ததற்கே, பாஜக மேலிடம் சங்கடப்பட்டதாம்.. காரணம், கூட்டணியை முடிவு செய்வதும், இறுதி செய்வதும், கூட்டணி தலைமைதான், அந்த கூட்டணி தலைமை பாஜக என்பது ஒவ்வொரு தேர்தலிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.. கடந்த தேர்தலிலும் இப்படித்தான், முதல்வர் யார் என்பதை கூட்டணி தலைமை முடிவு செய்யும் என்று எல்.முருகன் முதல் வானதி வரை 6 மாத காலமாகவே சொல்லி கொண்டிருந்தனர். இதனால் எடப்பாடி டீமுக்கு மண்டை காய்ந்துவிட்டது.

சங்கடம் B
சட்டசபை தேர்தலில், மத்திய பாஜகவின் ரோல் குறைவு என்றாலும், இறுதி முடிவு எடுப்பது தாங்கள்தான் என்பதில் பாஜக விட்டுக்கொடுக்காமல் உள்ளது.. சட்டசபை தேர்தலுக்கே அப்படி என்றால், எம்பி தேர்தலில், கூட்டணி முடிவை பிறர் எடுக்க விட வாய்ப்பில்லை.. ஆனால், முந்திக்கொண்டு, எடப்பாடி இப்படி சொல்லிவிட்டது, லேசான கடுப்பை தந்ததாகவே தெரிகிறது.. நாமக்கல்லில், கூட்டணி பற்றி பேசியதற்கு மேலிடம் சங்கடப்பட்டுவிட்டது என்று தெரிந்தும்கூட, மயிலாடுதுறை பேட்டியில் அதையே திரும்ப சொல்லி உள்ளார் எடப்பாடி.. இது பாஜகவுக்கு 2வது ஷாக்கை தந்துள்ளது.

ஷாக் 1
நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி, நேரடியாகவே பாஜக மேலிடத்துக்கு 3வது ஷாக்கை தந்துள்ளது.

ஷாக் 2
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டதாகவும், அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிட வாய்ப்புள்ளதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் சொல்ல தொடங்கி உள்ளனர்.. அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளது.. ஆதரவையும் எடப்பாடிக்கு தந்து வருகிறார்கள்.. சிவி சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி போலவே ஏகப்பட்டோர் பாஜக எதிர்ப்பாளர்களாகவும் இருந்து வருகிறார்களாம்.

ஷாக் 3
கடந்த முறை, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியை இழந்தோம் என்ற மனநிலையில் இவர்கள் உள்ளவர்கள் என தெரிகிறது.. அந்தவகையில், எடப்பாடியின் அடுத்தடுத்த துணிச்சல் பேச்சுக்கள், இதுபோன்றோருக்கு புது தெம்பை தந்து வருகிறதாம்.. ஒருவேளை உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்பதுபோல பாஜக முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, இனியும் எடப்பாடியிடம் அமைதியாக போகாது என்கிறார்கள் அதிமுகவில் ஒருசாரார்.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருந்தாலும், அந்த பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் இப்போதே அனலடிக்க ஆரம்பித்துவிட்டது.. என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications