Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ஸ்வீட் திட்டம்.. அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்த போகும் மோடி.. வரப்போகும் அதிரடி அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு 3 முக்கியமான அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருடா வருடம் விலைவாசி உயர்ந்து வருகிறது. விலைவாசிக்கு ஏற்றபடி எப்போதும் சம்பளமும் உயர வேண்டும். தனியாரில் இதற்காக வருடா வருடம் ஹைக் கொடுக்கப்படும். இதுவே அரசு நிறுவனங்களில் செய்தால் அதை அகவிலைப்படி உயர்வு என்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

3 Sweet informations from Union Government for the employees all over India

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

மே மாதத்தில், உத்தரப் பிரதேச அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே 4% DA மற்றும் DR உயர்வை ஏற்படுத்தியது. இதை ஜனவரி 1, 2023 முதல் வழங்க முடிவு செய்தது. இந்த உயர்வைத் தொடர்ந்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR விகிதம் 38 லிருந்து முதல் 42% ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரலில், ஹரியானா அரசு 7வது ஊதியக் குழுவின் ஊதிய மேட்ரிக்ஸின் படி சம்பளம் பெறும் மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதத்தில் 4% உயர்வு அறிவித்தது. ஹரியானா மாநிலத்தில் DA விகிதம் ஜனவரி 1, 2023 முதல் அடிப்படை ஊதியத்தில் 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3 அறிவிப்புகள்: இந்த நிலையில்தான் மத்திய அரசு 3 முக்கியமான அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.

அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.

அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அறிவிப்பு 2 - அதேபோல் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த டிஏ நிலுவை காரணமாக சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு 3- அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம். மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான்.

இப்போது இருக்கும் விதிப்படி ஒருவர் வாங்கும் வருமானத்தில் கடந்த 60 மாதங்கள் பெற்ற சராசரி வருமானத்தை அவர்களின் பென்சன் சர்வீஸ் மூலம் பெருக்கி அதை 70 ஆல் வகுக்கும் முறை உள்ளது.

3 Sweet informations from Union Government for the employees all over India

ஆனால் இதை மாற்ற உள்ளனர். புதிய விதிப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும்.

உதாரணமாக இப்போது இருக்கும் முறைப்படி கடந்த 60 மாதங்களில் உங்கள் வரும் 80 ஆயிரம் மற்றும் பென்சன் 32 வருடங்கள் என்று வைத்துக்கொள்வோம். 80,000 ஐ 32 ஆள பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். பென்சன் தொகை 36,571 ரூபாய் வரும்.

புதிய முறைப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும். இதனால் தொடக்க காலங்களில் நீங்கள் வாங்கிய 30, 40 ஆயிரம் வருமானத்தையும் வைத்து சராசரி கணக்கீடு செய்வார்கள்.

அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் பென்சன் தொகை கணிசமாக குறையும். இந்த புதிய பென்சன் கணக்கீட்டு முறையைத்தான் கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+