தாம்பரத்திலே நிறுத்தப்படும் ரயில்கள்.. சென்னைக்கு செல்வது எப்படி? இந்த மேட்டரை நோட் பண்ணுங்க
சென்னை: பொறியியல் பணிகள் காரணமாக 3 முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் அடுத்த 3 நாட்களுக்கு தாம்பரத்திலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கிருந்து சென்னைக்கு எப்படி செல்வது என்று பார்ப்போம்.
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்: இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, "சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போா்ட்) அதிவிரைவு ரயிலானது (12653) இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

மன்னை எக்ஸ்பிரஸ்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மன்னாா்குடி மன்னை விரைவு ரயிலானது (16179) இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 க்குப் புறப்படும்.
மங்களூர் ரயில்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது (16159) வரும் இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 க்குப் புறப்படும்.
பல்லவன் எக்ஸ்பிரஸ்: காரைக்குடி - சென்னை எழும்பூா்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது ( 12605, 12606) நேற்று முதல் தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.
வைகை எக்ஸ்பிரஸ்: மதுரை - சென்னை எழும்பூா் - மதுரை வைகை அதிவிரைவு ரயில்களானது (12635, 12636) நேற்று முதலே தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.20 க்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு கால் டாக்சி, ஆட்டோ இல்லாமல் பேருந்தில் செல்பவர்கள் சென்னை பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக படப்பை நோக்கி செல்லும் பேருந்து எண் 579, உயர்நீதிமன்றம் வரை செல்லும் 18ஏ மற்றும் 18 ANS, திருவொற்றியூர் செல்லும் 18L, பூந்தமல்லி செல்லும் 66, கோயம்பேடு செல்லும் 70சி, ஆவடி செல்லும் 70NS, பிராட்வே செல்லும் L21G, அயநாவரம் செல்லும் L70G, கூடுவாஞ்சேரி செல்லும் M18, வேளச்சேரி செல்லும் M21, டி நகர் செல்லும் M29, வடபழனி செல்லும் SM18M, என்னூர் செல்லும் S01E, முகப்பேர் மேற்கு செல்லும் ZK70 ஆகிய பேருந்துகளில் செல்லலாம். இது அல்லாமல் நிமிடத்திற்கு ஒருமுறை பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications