பொங்கல் தொகுப்பு! ரூ.199 முதல் ரூ 999 வரை! ரேஷனில் 35 மளிகை பொருட்களை விற்க தமிழக அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அனுப்பியுள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்.

pongal 2025 ration shop tamil nadu 2025

ரூ.199 முதல் 999 வரை: இதில் ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' (8 பொருட்கள்), ரூ.499-க்கு 'சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' (20 பொருட்கள்), ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு' (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இத்தொகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை சார்பில் பண்டிகையை ஏழை மக்களும் நிறைவாக கொண்டாட வேண்டி, அதற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டல சாலைகள், நியாய விலைக் கடைகளில் விற்கப்படுகிறது.

இங்கு விலை மலிவாகவும் பொருட்கள் தரமானதாகவும் இருப்பதால் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெறவுள்ளன.

கடந்த தீபாவளிக்கும் தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் 15 மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தொகுப்பில் கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம், சீரகம்- 100 கிராம், வெந்தயம்- 100 கிராம், சோம்பு- 50 கிராம், மிளகு- 50 கிராம், மிளகாய்- 250 கிராம், தனியா- 500 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், புளி- 500 கிராம், உப்பு- 1 கிலோ, உளுத்தம் பருப்பு - 500 கிராம், கடலை பருப்பு- 200 கிராம், பாசிப்பருப்பு- 200 கிராம் , வறுகடலை- 200 கிராம் , பெருங்காயத்தூள்- 15 கிராம் ஆகிய 3.8940 கிலோ கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+