தங்கத்தில் செய்த கதவு தாமிரத் தகடாக மாறிய ஆச்சரியம்.. சபரிமலை கோயில் 30.300 கிலோ தங்கத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபக்கம் காவல்துறை, மறுபக்கம் தேவசம்போர்டு, இன்னொரு பக்கம் கேரளா ஹைகோர்ட், இதற்கு நடுவில் எதிர்க்கட்சிகள் என நாலாபக்கமும் விறுவிறு விசாரணைகளும், சலசலப்புகளும் எழுந்துள்ளன.. தற்போது, இந்த மாயமான தங்கம் குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் சபரிமலையில்

30 300 kg Gold Golden door Copper Plates 30 300

கடந்த 1998ல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதிப்பதற்காக, 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் வழங்கினார். இதையடுத்து, கோவிலின் மேற்கூரை, சில பக்க சுவர்கள், வாசல், நிலை, படிகள், துவார பாலகர் சிலைகள் போன்றவற்றுக்கு தங்க தகடுகள் பதிக்கப்பட்டன.

விஜய் மல்லையா தந்த தங்கம்

பிறகு, கடந்த 2019ல் தங்க தகடுகள் பதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதிகளை புதுப்பிக்கவும், பராமரிப்பு செய்வதற்காகவும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.. அங்கு அப்பணிகள் முடிந்ததுமே, புதிய வாசல், நிலை போன்றவை பொருத்தப்பட்டன..

பிறகு இதே பகுதிகளை மறுபடியும் பராமரிப்புக்காக, மீண்டும் சென்னைக்கு இந்த வருடம் கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது. அபபோதுதான், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

தங்கத்தில் தாமிரத் தகடுகள்

இதுகுறித்து உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் சொல்லும்போது, "கடந்த 2019ல் பெங்களூருவில் நிலம்பூர் தேக்கை பயன்படுத்தி புதிய வாசலை தயாரித்தேன். பிறகு ஐதராபாத்துக்கு எடுத்துச்சென்று தாமிரத்தகடுகளை பதித்து, பிறகு
சென்னைக்கு கொண்டு வந்து தங்கமுலாம் பூசி சபரிமலைக்கு கொண்டு வந்து அவற்றை பொருத்தினேன்" என்கிறார்.

அப்படியானால் சபரிமலையில் இருந்து ஏற்கனவே கொண்டு சென்ற தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட வாசலும், நிலையும் எங்கே போனது என்பதுதான் மிகப்பெரிய சிக்கலாக தற்போது எழுந்துள்ளது..

அன்று விஜய் மல்லையா தந்த தங்கத்தில், சபரிமலை கோவிலின் வாசல் மற்றும் நிலை போன்றவை தகடுகள் பதிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களும் இருக்கிறதாம்.

தங்க தகடுகள் தாமிரம்

அப்படியிருக்கும்போது, அந்த தங்கத்தகடுகள் எப்படி தாமிரமாக எப்படி மாறியது? யார் மாற்றியது? 2 துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்தது எப்படி? தங்கத்தில் இருந்ததை தாமிரத்தகடுகள் என்று அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபு எப்படி சான்றிதழ் கொடுத்தார்? என்றெல்லாம் கேள்விகள் சபரிமலையை சுற்றி வருகின்றன. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான நீதிமன்ற விசாரணைகளும் நடந்து வருகின்றன.. கடந்த 2019ல் செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பிறகு, தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடமிருந்து இ மெயில் மூலம் கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அது குறித்த ஆதாரம் கேரள ஹைகோர்ட்டில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

தங்க முலாம் பூசும் பணி

அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போற்றி, "சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது. உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா?" என்று கேட்டுள்ளார்.

இந்த கடிதத்தை படித்து பார்த்து கேரள ஹைகோர்ட்டே அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.. எனவே, தங்கம் மாயமானது குறித்தும், அதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிரடி சஸ்பெண்டு

மற்றொருபக்கம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கேரள சட்டசபையில் கடும் அமளியில் நேற்றைய தினமும் ஈடுபட்டிருக்கிறார்கள்.. கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.. இதனால், அவையில் சலசலப்பு நிலவியது.

இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், தற்போது துணை கமிஷனராக உள்ள முராரி பாபு பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+