300+ பினாமிகள்.. சிக்கப்போகும் பெரிய தலைகள்.. லிஸ்ட்டை யாரிடம் கொடுப்பது என ஆலோசனை.. அண்ணாமலை தகவல்!
சென்னை: DMK Files பாகம் 2ல் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. பினாமிகள் பெயர்களை பொதுவெளியில் சொல்வதா அல்லது ஆளுநரிடம் தெரிவிப்பதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவரிடம் வழக்கின் நகல் வழங்கப்பட்டு, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 2014ஆம் ஆண்டு மு.க.அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார் எத்தனை கப்பல் வைத்துள்ளார் அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறினார். அவர்மீது டி.ஆர்.பாலு எந்த வழக்கும் தொடரவில்லை. டி.ஆர்.பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள்.
திமுக ஃபைல்ஸ் பார்ட் 1 வெளியிட்டதால் திமுகவினர் பலர் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். அதில் இன்று டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.
அடுத்தகட்டமாக திமுக ஊழல் பட்டியல் சம்பந்தமான DMK Files பாகம் இரண்டு தயாராக உள்ளது. பாதயாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. பினாமிகள் பெயர்களை பொது வெளியில் சொல்வதா அல்லது ஆளுநரிடம் தெரிவிப்பதா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியிருக்கக்கூடிய பட்டியலில் இருப்பவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் தங்கள் அனுமதியின்றி சிபிஐ வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. சிபிஐக்கு கொடுத்திருக்கக்கூடிய அந்தஸ்தை மாநில அரசு எடுத்துவிட்டது. இதனால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.
DMK Files இரண்டாம் பாகம் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பேன். DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும். என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications