ரகசிய மெத் லேப், மனைவியின் நெட்வொக்! விஜயின் மூக்கின் கீழ் நடந்த போதை மாஃபியா? இன்னும் மவுனம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகப்பட்டினத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் (DRI) பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ மெத்தம்பேட்டமைன் (Meth) வழக்கில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்து வருகின்றன.

ஆரம்பத்தில், "இது வெறும் சாலை ஓரத்தில் பிடிபட்ட போதைப் பொருள், கைதான நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்" என்று கூறி வழக்கை மிகச் சாதாரணமாக மூடி மறைக்க தவெக தலைமை திட்டமிட்டது. ஆனால், புலனாய்வு அமைப்புகளின் தீவிர விசாரணையில் வெளிவந்துள்ள உண்மைகள், இது ஏதோ வழிப்போக்கன் செய்த வேலை அல்ல; சர்வதேச அளவில் வேர்விட்ட ஒரு பிரம்மாண்டமான போதை நெட்வொர்க் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

tvk vijay

ரகசிய 'மெத் லேப்' மற்றும் சுத்திகரிப்பு அதிர்ச்சி!

புலனாய்வு அமைப்புகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, வடமாநிலங்கள் மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு, தமிழகத்திலேயே ரகசிய ஆய்வகம் (Chemical Lab) அமைத்து மெத்தம்பேட்டமைனைத் தூய்மைப்படுத்தும் (Purification) பணிகளை பூபாலன் தரப்பு ஒருங்கிணைத்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சாதாரண கஞ்சா அல்லது புகையிலையைக் கடத்துவது வேறு; வேதியியல் ரசாயனங்களை வைத்து ஆய்வகத்தில் ஆபத்தான சிந்தடிக் மெத் தயாரிப்பதும், அதைச் சுத்திகரிப்பதும் சர்வதேச அளவில் செயல்படும் கொடூர மாஃபியாக்களால் மட்டுமே செய்ய முடிகிற காரியம். அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான ரசாயனக் கூடத்தை இயக்கும் அளவுக்கு தவெகவின் நாகை மாவட்டப் பொறுப்பாளர் பூபாலன் துணிந்திருக்கிறார் என்றால், அவருக்குப் பின்னால் இருந்த அரசியல் பாதுகாப்பு எவ்வளவு வலுவாக இருந்திருக்க வேண்டும்?

சர்வதேச சங்கிலியின் முக்கிய புள்ளி: மனைவியின் வெளிநாட்டுத் தொடர்பு!

இந்த வழக்கில் மற்றொரு அதிர வைக்கும் திருப்பமாக, பூபாலனின் மனைவி இந்த சர்வதேச சங்கிலியின் மிக முக்கியமான இணைப்பாகச் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை தொடர்பு: பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிப் பாதை: நாகை மற்றும் வேளாங்கண்ணி கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு படகுகள் மூலம் மெத் கடத்துவதற்கு, அண்டை நாட்டில் இருக்கும் நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாள்வது மற்றும் கடத்தல் பாதைகளைத் திட்டமிடுவது போன்ற பணிகளில் பூபாலனும் அவரது மனைவியும் முக்கியத் தூண்களாக இருந்துள்ளனர்.

ரிசார்ட் மற்றும் தங்கும் விடுதிகள்: வேளாங்கண்ணி பகுதியில் லீசுக்கு எடுக்கப்பட்ட விடுதிகள் மற்றும் ரகசிய இடங்கள் மூலம் இந்த பல நூறு கோடி ரூபாய் போதைப்பொருள் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டு, கடல் வழியாக அனுப்புவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து சர்வதேச போதை மாஃபியாவை இயக்கும் தலைவர்களாக உருவெடுத்து, தமிழகத்தின் கடலோரப் பகுதியையே போதைக் கடத்தல் மையமாக மாற்றியுள்ளனர்.

முதலமைச்சர் விஜயின் மூக்கின் கீழ் நடந்த பயங்கரம்!

மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த சர்வதேச போதை நெட்வொர்க்கும் தமிழகத்தின் முதலமைச்சரான விஜயின் மூக்கின் கீழேயே.. அவருக்கு தெரியாமல் தங்கு தடையின்றி நடந்திருக்கிறது!

உள்துறை மற்றும் உளவுத்துறை முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும்போது, அவரது சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி பல நூறு கோடி ரூபாய்க்கு சிந்தடிக் டிரக்ஸ் தயாரிப்பதும், கடத்துவதும் மாநில உளவுத்துறைக்குத் தெரியாமல் போனது எப்படி?

மத்திய அமைப்பான DRI வந்து நாகப்பட்டினத்தில் கதவைத் தட்டி 137 கிலோ விஷத்தைப் பறிமுதல் செய்யும் வரை, தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தன? அல்லது, ஆளுங்கட்சியின் மேலிடத்திற்கு மிக நெருக்கமானவர், விஜயுடன் தனி அறையில் தோளோடு தோள் கட்டித் தழுவிப் படம் எடுக்கும் அளவுக்குச் செல்வாக்கு மிக்கவர் என்பதால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருந்ததா?

இன்னமும் தொடரும் மவுனம்... விஜய் எப்போது வாய் திறப்பார்?

"போதை இல்லாத தமிழகம் அமைப்போம்" என்று மாநாடுகளில் உணர்ச்சி பொங்கப் பேசி, இளைஞர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த விஜய், இன்று தன் சொந்தக் கட்சியினர் செய்த இந்த தேசத் துரோகக் குற்றத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் கேள்வி கேட்ட விஜய், தன் சொந்த நிர்வாகி அமைத்த ரகசிய மெத் ஆய்வகம் பற்றி மக்களிடம் ஏன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை? சர்வதேச கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததா? அந்த நெட்வொர்க்கில் உள்ள மற்ற ஆளுங்கட்சி புள்ளிகளைத் தேடி தமிழக காவல்துறை வலைவீசியுள்ளதா? அல்லது மத்திய ஏஜென்சிகள் விசாரணை செய்வதை வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறார்களா?

பூபாலனை கட்சியை விட்டு நீக்கிவிட்டோம் என்ற ஒரு காகித அறிக்கை எந்தவிதத்திலும் மக்களின் கேள்விகளை அடக்கிவிடாது. தன் கண் முன்னே, தன் கட்சியின் ஆசியோடு இளைஞர்களின் ரத்தத்தில் விஷத்தைக் கலந்த இந்த மெகா மாஃபியா விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தமிழக மக்களுக்குத் தனது மவுனத்தைக் கலைத்து நேரடியான விளக்கத்தை அளிக்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+