மினி சரக்கு லாரியில் இருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 300 கிலோ குட்கா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சாலையோரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் மினி சரக்கு லாரி ஒன்று நீண்ட நேரமக நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து மினி சரக்கு லாரியை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

சோதனையில் 8 மூட்டைகளில் சுமார் 300 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குட்கா மூட்டைகளை போலீஸார் கைப்பற்றினர். குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் குட்கா மூட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் யாருக்கு சொந்தமானது என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் குட்கா புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்றும் விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் குட்காவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூட்டை மூட்டையாக அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications