இடைத்தேர்தல் அறிவிப்பால் திருவாரூரில் புயல் நிவாரண உதவி வழங்க முடியாதா? கலெக்டர் சொல்வதை பாருங்கள்
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் பணியில் 2,500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூரில் இன்று, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர் கோட்டாட்சியர் முருகதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் உதவி தேர்தல் அலுவலர்கள் செயலாற்ற உள்ளனர்.

இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் காலை 11 மணி தொடங்கி மூன்று மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தொடர்ந்து 11ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும் 14ஆம் தேதி வேட்பு வாபஸ் பெறும் நாளாகும்.
28ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. 31ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள் உடன் 1.9.2018 தகுதி நாளாகக் கொண்டு கடந்த 31.12.2018 வரை பட்டியலில் சேர்க்கப்பட்ட அவர்களையும் சேர்த்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 462 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 321 பெண் வாக்காளர்கள். மற்றும் 20 இதர வாக்காளர்கள் உட்பட 2 லட்சத்து 63 ஆயிரத்து 803 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இதற்காக 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவாரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக 9 பறக்கும் படைகள், 6 நிலையான படைகள், வீடியோ கண்காணிப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப இந்த கண்காணிப்பு படைகள் அதிகப்படுத்தப்படும். இந்த தேர்தல் பணியை செய்து முடிக்க சுமார் 2,500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கஜா புயல் நிவாரணத்தை பொருத்தவரை, தேர்தல் ஆணையம் நிவாரணம் வழங்கலாம் என்று, கூறியுள்ளது. இருப்பினும் சில புரிதல்களுக்காக, தேர்தல் ஆணையத்திடம் சில விளக்கங்களை கேட்டுள்ளோம்.
இந்த விளக்கங்கள் வந்தபிறகு நிவாரணம் வழங்கும் பணிகள் குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் வாக்களிப்பதற்காக லஞ்சம் பெறுவதும் சட்டப்படி குற்றமாகும். எனவே அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்காகவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து திருவாரூர் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறித்து தீவிரமாக சோதனையிட்டபின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
வருமானவரித்துறை 50,000 ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தால் அதற்கு உரிய ஆவணங்கள் காட்ட வேண்டும் என்று சொல்கிறது.
இதனை பின்பற்றி, வாகன சோதனையில் ஈடுபடும் போது, எடுத்துச் செல்லும் பொருட்கள் அல்லது கையிருப்பில் உள்ள பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை எனில் கண்காணிப்பில் உள்ள அலுவலர்கள் பறிமுதல் செய்வார்கள். உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications