தமிழகத்தில் 7-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைகிறது.. ஒரே நாளில் 486 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 7-வது நாளாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

ஊரடங்கு பலன் கொடுக்கிறது
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இன்று இந்த முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால் கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிழப்பு ஆதிக்கம்
இதனால் மொத்த பாதிப்பு 20,09,700 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 107 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 22,775 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 31,255 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,74,539 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னையில் குறைவு
3,12,386 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,124 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,65,67,897 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2762 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவைதான் பர்ஸ்ட்
கோவையில் மட்டும் 3937 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1379 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 788 பேருக்கும், மதுரையில் 1140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1007 பேருக்கும், திருவள்ளூரில் 967 பேருக்கும், திருச்சியில் 1287 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1823 பேருக்கும், விருதுநகரில் 818 பேருக்கும், ஈரோட்டில் 1731 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications