தமிழகத்தில் 33,361 பேருக்கு கொரோனா.. 4,734 பாதிப்புகளுடன் கோவை முதலிடம்.. சென்னையில் தொடர்ந்து குறைவு
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

ஊரடங்கு பலன்
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால் கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிழப்பு அதிகரிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 19,78,621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 474 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 79 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 22,289 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 30,063 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,43,284 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னை ஆறுதல்
3,13,048 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,64,124 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,64,02,773 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2779 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அச்சுறுத்தி வருகிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு முதலிடம் பிடித்துள்ளது.

கோவை தொடர் முதலிடம்
கோவையில் மட்டும் 4734 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1392 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 751 பேருக்கும், மதுரையில் 1395 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 979 பேருக்கும், திருவள்ளூரில் 1221 பேருக்கும், திருச்சியில் 1617 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 2074 பேருக்கும், விருதுநகரில் 1016 பேருக்கும், ஈரோட்டில் 1699 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications