திமுக ஆட்சி மீது 33% பேருக்கு அதிருப்தி.. சத்தியம் டிவி வெளியிட்ட மெகா சர்வே முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2026 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் படி தமிழகத்தில் திமுக ஆட்சி மீது 33 சதவீதம் பேருக்கு அதிருப்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியடைந்தது. தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

dmk

தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்க தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை அவரது கட்சி புறக்கணித்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய் கட்சி தனித்து போட்டியிடுகிறதா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து களமிறங்குகிறதா? என்பது இன்னும் முடிவாகவில்லை.

இருப்பினும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டில் தனது தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனால் 2026 சட்டசபை தேர்தல் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்களிடம் ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது.

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அந்த சர்வேயின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சர்வேயில் தற்போது தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி மீது அதிருப்தி இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் அதிருப்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் அதிருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் 27 சதவீதம் பேர் ஓரளவு அதிருப்தி என்றும், 10 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். அதன்படி பார்த்தால் சர்வேயில் பங்கேற்றவர்களில் அதிகமானவர்கள் (33 சதவீதம் பேர்) திமுக மீது அதிருப்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+