Kanimozhi: திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறாரா கனிமொழி? அகம் காக்க வருகிறாரா?
சென்னை: திமுகவின் துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என 35 பேர் அவர் பெயரில் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் கனிமொழி தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சில தொகுதிகளை குறிப்பிட்டு அங்கு கனிமொழி போட்டியிட வேண்டும் என அவரது பெயரில் விருப்பமனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.
அதாவது 35 விருப்பமனுக்கள் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. திருச்செந்தூர் சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என 15 மனுக்களும், நெல்லையில் போட்டியிட 5 மனுக்களும், பாளையங்கோட்டையில் போட்டியிட 4 மனுக்களும், தென்காசியில் போட்டியிட்ட 4 மனுக்களும் மயிலாப்பூரில் போட்டியிட 3 மனுக்களும் நாங்குநேரியில் போட்டியிட ஒரு மனுவும், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னை தொகுதிகளில் போட்டியிட 3 மனுக்களும் என 35 மனுக்கள் திமுகவில் சமர்க்கப்பட்டுள்ளதாம்.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் கனிமொழிக்கு செல்வாக்கு கூடியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. தேசிய அரசியலில் இருக்கும் கனிமொழியை மாநில அரசியலுக்கு கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கனிமொழியின் 56ஆவது பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடினர். "திராவிடத் தலைவி, அக்கா கனிமொழி" என்ற முழக்கங்களையும் எழுப்பினர். அவரது சிஐடி காலனி வீட்டு வாசலில் குவிந்த ஆதரவாளர்கள் 20 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்த கேக்கில் தமிழக சட்டசபை கட்டடமும், ஸ்டாலின் கனிமொழி புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. "புறம் காத்தது போதும், அகம் காக்க வா" என கேக்கில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அதாவது வரும் சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி போட்டியிட்டு எம்எல்ஏவாகி முக்கிய அமைச்சரவையில் அவர் இடம் பெற வேண்டும் என்பதை விரும்புகிறார்கள்.
அது போல் தெற்கில் இருந்து மீண்டும் ஒரு சூரியன் என்ற வாசகம் அடங்கிய ஒரு போஸ்டரும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் கட்டடம் இடம்பெற்றிருந்தது. தற்போது குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் பொறுப்பாளராக கனிமொழி இருந்து வருகிறார். அத்துடன் திமுக துணை பொதுச் செயலாளர், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஆதரவாளர்களின் இந்த கோரிக்கைக்கு கனிமொழி என்ன முடிவு எடுக்க போகிறார் என தெரியவில்லை. திமுக தலைமையும் கனிமொழியை மாநில அரசியலுக்கு கொண்டு வருமா? ஒரு வேளை அப்படி கொண்டு வந்தால் சட்டசபை தேர்தலுடன் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கும் சேர்த்து நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் திருச்செந்தூரில் இருந்து 15 விருப்பமனுக்கள் கிடைத்துள்ளதால் கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் செல்வாக்கை பெற்றுள்ள கனிமொழி, அங்கு போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்செந்தூரில் கனிமொழி போட்டியிட்டால் அனிதா ராதாகிருஷ்ணன் என்ன ஆவார் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது திருச்செந்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். மீன்வளத் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என திமுக தலைமையிடம் கூறியதாக அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. எனவே திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications