அட்றா சக்க.. தமிழ்நாடு அரசின் 360 டிகிரி திட்டம்! இனி சுத்தி சுத்தி பார்க்கலாம் - வியந்த உதயநிதி
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள நினைவகங்கள், தலைவர்களின் சிலைகளை 360 டிகிரி கோணங்களில் நேரில் பார்ப்பதை போன்றே செல்போனில் பார்க்கும் வசதிக்கு தமிழ்நாடு செய்தித்துறை ஏற்பாடு செய்து இருக்கும் நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது போனில் ஸ்கேன் செய்து அந்த திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து உள்ள காமராஜர் சாலையோரம் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களின் சிலைகள் அமைந்து இருக்கின்றன. குறிப்பாக ஒரு மூளையில் உழைப்பாளர் சிலையும் மறு முனையில் காந்தி சிலையும் அமைந்து மெரினா கடற்கரையின் முக்கிய அடையாளமாக மாறி இருக்கின்றன.

அதேபோல் தந்தை பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, கண்ணகி சிலை, காமராஜர் சிலை, உழைப்பாளர் சிலை, சுவாமி சிவானந்தா சிலை, ஔவையார் சிலை, டாக்டர் அன்னி பெசன்ட் சிலை, ஜி.யு. போப் சிலை, சர் தாமஸ் மன்ரோ சிலை, சுப்பிரமணிய பாரதியார் சிலை, ராபர்ட் கால்ட்வெல் சிலை போன்றவை அமைந்து உள்ளன.
அத்துடன் முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம், கருணாநிதி நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் போன்றவையும் அங்கே அமைந்து உள்ளன. அத்துடன் நம்ம சென்னை செல்பி ஸ்பாட்டும் மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து உள்ளது. இவை அமைத்தும் மெரினாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனம் ஈர்க்கும் இடங்களாக அமைந்து இருக்கின்றன.
இந்த நிலையில் மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து இருக்கும் தமிழ்நாடு நினைவகங்கள் மற்றும் சிலைகள் 360 டிகிரி கோணத்தில் செல்போனில் பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை ஏற்பாடு செய்து இருக்கிறது. தலைவர்களின் சிலைகளுக்கு முன் வைக்கப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால் சிலைகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும்.

இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.எல்.ஏ. த.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications