இதான் 360 டிகிரி.. ரொம்ப பேசிக் இதெல்லாம்! அண்ணாமலைக்கு "பாடம்" எடுத்த பிடிஆர்.. இப்படி சொல்லிட்டாரே
சென்னை: திமுகவும் பாஜகவும் 360 டிகிரி எதிரி என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக மோடி வருகை புரிந்தார். ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நீட், தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் மேடையில் எடுத்து வைத்தார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றது.

மோடி
இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் குறித்து பேசிய அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினின் பேச்சை விமர்சனம் செய்து இருந்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசிய விதம் சரியில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள் . 360 டிகிரி நாங்கள் திமுக எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான மரியாதையை கொடுக்காமல் இருக்க மாட்டோம்.

அண்ணாமலை விமர்சனம்
முதல்வர் பதவிக்கு என்று மரியாதை உள்ளது. அந்த மரியாதையை நாங்கள் கொடுப்போம். முதல்வருக்கு உண்டான மரியாதையை கண்டிப்பாக நாங்கள் வழங்குவோம். அதேபோல் பிரதமர் பதவிக்கு உண்டான மரியாதையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் எதோ கட்சி நிகழ்ச்சி போல பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

360 டிகிரி
இந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் அண்ணாமலையின் இந்த 360 கருத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏனென்றால் 360 டிகிரி என்பது எதிர் எதிர் துருவம் கிடையாது. அதே ஒரு புள்ளியை குறிக்கும். அதாவது ஏ என்ற புள்ளிக்கு 360 என்பது அதே ஏ என்ற புள்ளிதான். இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஜியோமெட்ரி தெரியவில்லை என்று திமுகவினர் பலர் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
திமுக மூத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கருத்தில், இதுதான் 360.. இது மிகவும் பேசிக் விஷயம் என்பதால் அதை யுபிஎஸ்சி தேர்வில் சேர்க்கவில்லை போல என்று பிடிஆர் கிண்டல் செய்துள்ளார். அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் யுபிஎஸ்டி தேர்வை சுட்டிக்காட்டி பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications