350 அந்தப்புர பெண்கள்! 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்! பாட்டியாலா பூபிந்தர் சிங்கின் ராஜபோக வாழ்க்கை தெரியுமா
சென்னை: 350 அந்தப்புர துணைவியர், 88 குழந்தைகள் என உலகையே வியக்க வைத்த பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் பற்றி உங்களுக்கு தெரியுமா? இவரது வாழ்க்கை முழுவதும் சுவாரஸ்யமானது.. அசாத்திய ஆடம்பரங்களால் நிறைந்தது... பிரான்ஸ் நாட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல் இந்தியாவின் முதல் சொகுசு விமானம் வரை இவர் தொட்டதெல்லாம் உச்சம்தான்.. இவரது விசித்திர பழக்கவழக்கங்களையும், தனிப்பட்ட ராஜ போக வாழ்க்கையை பற்றியும் மீண்டும் இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. . அவைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இந்திய வரலாற்றில் மன்னர்கள் என்றாலே ஆடம்பரம், அரண்மனை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என அனைத்துக்குமே பெயர்போனவர்கள்.. அதனால்தான் அவர்கள் எப்போதும் பேசுபொருளாகவே இருந்திருக்கிறார்கள்..

ராஜபோக மன்னர் அந்த வகையில், தனது ஆடம்பரமான வாழ்க்கையால் பலரையும் வியக்க வைத்தவர் பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங். 1891ல் பிறந்த இவர், தனது 9வது வயதிலேயே அப்பாவை இழந்து பாட்டியாலா சமஸ்தானத்தின் மன்னரானார். 6 அடி 4 அங்குல உயரமும், 136 கிலோ எடையும் கொண்டவர்.. பூபிந்தர் சிங்கின் அந்தப்புர வாழ்க்கை வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும்.. அவரது அந்தப்புரத்தில் சுமார் 350 பெண்கள் இருந்ததாகவும், இவர்களின் மூலம் மன்னருக்கு 88 குழந்தைகள் பிறந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
பூபிந்தர் சிங்கின் அந்தப்புர வாழ்க்கை இதில் 52 குழந்தைகள் முழுமையாக வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை உயிரோடு இருந்துள்ளார்.. மன்னர் பூபிந்தர் சிங் மொத்தம் 10 முறை திருமணம் செய்து கொண்டார். எனினும், மிகவும் பிடித்தமான ராணி, விமலா கவுர் என்பவர்தானாம்.. அதனால்தான், விமலாவை மட்டுமே அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களுக்கும், =பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சென்றுள்ளார். தனது அந்தப்புரப் பெண்கள் அனைவரும் தனது ரசனைக்கேற்ப மிக அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம்..
350 அந்தப்புர மனைவிகள்அதனால்தான் பிரான்ஸ், பிரிட்டனில் இருந்து பியூட்டிஷன்களை பாட்டியாலாவிற்கு வரவழைத்து வருவாராம்.. அதேபோல தன்னுடைய உடல் நலத்திற்காக அரிய வகை மூலிகைகளால் செய்யப்பட்ட பிரத்யேக மருந்துகளையும் இந்த மன்னர் சாப்பிட்டாராம்.. அவரது படுக்கையறையின் கூரையில் பாலியல் சிற்பங்களை செதுக்க வைத்திருந்துள்ளார்..
தனக்குப் பிடித்தமான பெண்களை தனது குளிர்ந்த நீர் நீச்சல் குளத்தை சுற்றி உட்கார வைத்துவிடுவாராம், பிறகு, தண்ணி அடித்து கொண்டே அந்த நீச்சல் குளத்தில் நீந்துவாராம். இந்த தகவலை ஜேம்ஸ் ஷெர்வுட் என்பவர் எழுதிய கட்டுரையில் பதிவு செய்துள்ளார்..
ராணிகள் பெயர்கள்அதேபோல ஒவ்வொரு இரவும் 360 விளக்குகளில் ராணிகளின் பெயர்களை எழுதி வைத்துவிடுவாராம்.. காலையில் இதில் முதலில் அணையும் விளக்கின் பெயரை கொண்ட ராணியுடன் அன்றைய இரவைக் கழிக்கும் வழக்கத்தை இந்த மன்னர் கடைப்பிடித்து வந்துள்ளார்.. மன்னரின் உணவு தேவையும் அரண்மனையில் அதிகமாகவே இருந்துள்ளது.. ஒரு நாளைக்குச் சுமார் 10 கிலோ உணவு இவருக்குத் தேவைப்பட்டதாகவும், மாலை நேரத் தேநீருடன் இரண்டு முழு கோழிகளைத் தின்பார் என்றும் கூறப்படுகிறது.
சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒருமுறை பிரிட்டிஷ் அதிகாரி ஒருவருடன் மன்னர் இரவு விருந்தில் பங்கேற்றபோது, இவரது தட்டில் 15 வகையான பராத்தாக்கள், அதிக அளவில் கபாப்கள் இருந்துள்ளன.. இதை பார்த்து அந்த பிரிட்டிஷ் அதிகாரியே வியப்படைந்துவிட்டாராம்.. இன்று பரவலாகப் பேசப்படும் பெரிய அளவிலான "பாட்டியாலா பெக்" (Patiala Peg) என்ற பெயர் இவருடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.
மகாராஜா பூபிந்தர் சிங் மொத்தம் 44 சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தாராம்.. இந்தியாவில் சொந்தமாக விமானம் வாங்கிய முதல் நபரும் இவர்தான் என்பது பலரும் அறியாத செய்தி.
சைல் கிரிக்கெட் மைதானம் 1928-ல் கார்டியர் நிறுவனம் மூலம் உலகின் புகழ்பெற்ற 234 காரட் "டி பீர்ஸ்" வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸை ஸ்பெஷலாக உருவாக்கியிருக்கிறார் பூபந்தர் சிங்.. கலை ரசனை அதிகம் இருந்தாலும், கிரிக்கெட் மீதும் அதிகமான ஆர்வம் கொண்டராக இருந்திருக்கிறார்.. அதனால்தான், உலகின் மிக உயரமான "சைல்" கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கினார். 1911-ல் இந்திய கிரிக்கெட் அணியை இங்கிலாந்திற்கு முன்னின்று வழிநடத்தியதோடு, உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தத் தனது நெருங்கிய நண்பர் ரஞ்சித் சிங்கின் பெயரால், ரஞ்சி கோப்பையை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications