வேகமாக குறையும் கேஸ்கள்.. தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 54 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் 4 ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகள் அமலில் உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது.

கேஸ்கள்
தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 54 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 33059 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 4029 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2432017 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34926 ஆக உள்ளது.

சோதனை
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2500002 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 155357 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 154028 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 32787062 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 214 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1937 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 436 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2992 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 330 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 4080 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications