சென்னையில் 39.46 லட்சம் வாக்காளர்கள்.. வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள், துறைமுகத்தில் குறைவு
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதியில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 06,638 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் கடந்த வருடம் 23ம் தேதி முதல் கடந்த ஜனவரி 22ம் தேதி வரை நடைபெற்றது.
அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
2020ம் ஆண்டிற்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் மற்றும் துணைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு, இன்று, மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷால் வெளியிட்டப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் சென்னையில் அதிகமாக உள்ளனர்.
19 லட்சத்து 43 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 2 ஆயிரத்து 223 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 1013 பேர் மூன்றாம் பாலின பிரிவினர் உள்ளனர். அதிக வாக்காளர் கொண்ட பெரிய தொகுதி வேளச்சேரி. குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை என்பது கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட 58,119 அதிகமாகும்.
இந்த பட்டியலில் திருவள்ளூர் மாவட்டத்தை உள்ளடக்கிய, மதுரவாயல், ஆவடி, மாதவரம் போன்ற பல சென்னை நகர பகுதி தொகுதிகள் வராது என்பது குறிப்பிடத்தக்து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications