3-வது குழந்தை பெற்றால் தமிழக அரசு ரூ.25000 ஊக்கத்தொகை தருமா? ஆந்திரா மாடலில் திட்டமா? வெளியான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவைப் போல தமிழகத்திலும் 3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு ஊக்கத்தொகை வழங்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அளித்த முக்கிய விளக்கம் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அரசு மருத்துவமனைகளில் பிறப்பு விகிதம் வருடந்தோறும் குறைந்து வருகிறது. 2017 - 18 ஆம் நிதியாண்டில் 65.8 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், தற்போது வெறும் 51 சதவீதமாக சரிந்துள்ளது.

TVK Minister Arunraj

அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கதொகை

இந்த சரிவை தடுக்கவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கவும் தான், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்" செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

மேலும், தகுதியுள்ள ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மூலமாகவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு தம்பதியினருக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதைக் குறிக்கும் மொத்த கருத்தரிப்பு விகிதம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2.1-லிருந்து 1.4-க்கும் கீழே குறைந்துவிட்டது. இதனால் தமிழ் சமூகம் மெல்ல மெல்ல முதுமை அடைந்து வருகிறது.. இப்போது 66 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 16 சதவீதம் பேர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், "2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம்" என்ற பழைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார் அமைச்சர் அருண்ராஜ்.

3வது குழந்தைக்கு நிதியுதவி

உடனே செய்தியாளர்கள், ஆந்திராவில் 3-வது குழந்தையைப் பெற்றுக்கொள்வோருக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்கள் உள்ள நிலையில், "தமிழ்நாட்டிலும் 3-வது குழந்தைக்கு நிதியுதவி அல்லது அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் அருண்ராஜ், "இது நீண்ட காலத் திட்டமிடலைச் சார்ந்ததாகும்.. இதை உடனடி தீர்வாக நம்மால் யோசிக்க முடியாது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது என்பது யதார்த்தமான உண்மையாகும். இந்த பிரச்சினையை எந்த அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என்பது கொள்கை அளவில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு சூழலாகும்.

அரசு துறை சார் அதிகாரிகள்

மனித வளமே மிகப் பெரிய சொத்தாகும். நம்மிடம் எத்தகைய வளங்கள் இருந்தாலும், அவற்றை சரியாக பயன்படுத்தி மேலும் பெருக்குவதற்கு மனித வளம் அவசியமாகும்.

இப்போது குழந்தை பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்துகொண்டே வருவது பொது சுகாதாரத் துறையில் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் நமது அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி, இதை எப்படி சரிசெய்யலாம் மற்றும் மேலும் மேம்படுத்தலாம் என்று ஆலோசிக்கும். மக்கள் தொகை தொடர்ந்து ஒரே சீராக இருக்க வேண்டுமென்றால், அதற்கான மாற்று விகிதம் உறுதியாக இருக்க வேண்டும்.. அதை தக்கவைக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்போம்" என்றார்.

பலன் தருமா? உதவித்தொகை

அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ள இந்த கருத்து, அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.. காரணம், 3-வது குழந்தைக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், முதியோர்-வேலை செய்வோர் விகிதத்தின் அழுத்தத்தை குறைக்கவும், குழந்தை வளர்ப்பு செலவை ஈடுசெய்யவும் உதவக்கூடும்..

ஆனாலும், ஆந்திராவை போல் 30,000 ரூபாய் முதல் 40000 வரையிலான ஒருமுறை உதவித்தொகை நகர்ப்புறங்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வீட்டு வாடகை போன்ற அதிகபட்ச செலவுகளுக்கு போதிய ஊக்கமாக இருக்காது என்றும், பெண்களுக்கு கூடுதல் குடும்ப அழுத்தத்தையும் ஏழைக் குடும்பங்களுக்குப் பொருளாதார சுமையையும் உருவாக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்ல, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பணமாக கொடுப்பதை விட, அந்த நிதியை குழந்தை பராமரிப்பு, பள்ளிக் கல்வி, சத்தான உணவு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பிற்கு செலவிடுவதே அதிக பலன் தரும். அதனால் வெறும் பண உதவி வழங்குவதை விட, குழந்தைகள் வளர்ப்பை எளிதாக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதே தமிழகத்திற்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+