இந்த படத்தில் 2 பேர் இல்லை.. "3 பேர் இருக்காங்க.." கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்.. 15 செகண்ட் டைம்
சென்னை: கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 நபர்கள் இருக்கின்ற மாதிரி தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இந்த படத்தில் 3 பேர் இருக்கிறார்கள். இந்த 3 வது நபரை 15 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள்.. மூளைக்கு வேலை வைப்பவை.. நமது கண்களையே நம்மால் நம்ப முடியாமல் செய்துவிடுபவை. அதாவது ஒரு படத்தை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் மற்றொரு விதமாகவும் தெரியும்.

சில நேரங்களில் படத்தில் இருக்கும் ஒரு விஷயம் கடைசி வரை நம் கண்ணுக்கு அகப்படாது. ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே அதில் இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும். இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இந்த இல்யூஷன் படங்கள் நல்ல பொழுதுபோக்கு விஷயமாக அமைந்துள்ளது.
இதனால், நெட்டிசன்கள் பலரும் இந்த இல்யூஷன் படங்களுக்கான விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விடையை கண்டுபிடித்துவிட்டு, தங்கள் நட்பு வட்டாரத்திற்கும் பகிர்ந்து சவால் விடுகிறார்கள்.. இதனால், இல்யூஷன் படங்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் இரண்டு பேர் கண்ணுக்கு தெரிகிறார்கள்.
இதில் மூன்றாவது ஒருவரும் ஒளிந்து இருக்கிறார். இந்த மூன்றாவது நபர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும்.. அதுவும் 15 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. என்ன சவாலுக்கு ரெடியாக இருக்கீங்களா... உங்களுக்கான நேரம் தொடங்குகிறது.. 1,2,.........15 ஓகே டைம் ஓவர்... உங்களில் பலரும் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
விடையை கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ்தான்.. உங்களீன் கவனிப்புத்திறன் அபாராமக உள்ளது. இல்யூஷன் படங்கள் சவாலுக்கு வைத்தால் உங்களை வெற்றி கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உங்கள் மைண்ட் ஷார்ப்பாக உள்ளது.. ரி கண்டுபிடிக்காதவர்களும் கவலைப்பட வேண்டாம்..இங்கே சில டிப்ஸ் கொடுக்கிறோம்..அதை வைத்து படத்தில் ஒளிந்து இருக்கும் மூன்றாவது நபரை கண்டுபிடித்துவிடலாம்..

படத்தில் வலது பக்கத்தில் தான் மூன்றாவது நபர் உள்ளார். எனவே, இடது பக்கமோ... பின்பக்கமாக இருக்கும் நபர் பக்கத்திலேயோ தேடிக்கொண்டு இருக்க வேண்டாம்.. இன்னும் எளிதாக சொல்வது என்றால்.. பெண் கையில் வைத்து இருக்கும் பாம்பில் தான் மூன்றாவது நபர் ஒளிந்து இருக்கிறார்... டிப்ஸ் என்ற பெயரில் கிட்டத்தட்ட படத்திற்கான விடையை சொல்லிவிட்டோம்..
தற்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்பலாம்.. இப்போது கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதைப் பார்த்து விடையை கண்டுபிடித்துவிடலாம்.. அட.. இந்த கோணத்தில் பார்க்காமல் விட்டு விட்டேனே என்று உங்களில் பலரும் ஃபீல் பண்ணக் கூடும்.












Click it and Unblock the Notifications