தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் தினமும் 4000 பேருக்கு கொரோனா என இருந்த நிலையில் பின்னர் சில நாட்களில் 3000 என குறைந்தது.
இதையடுத்து தற்போது தினமும் 4000 கேஸ்கள் வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்த அறிக்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்பட்டது.
அதில் தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்தது.

20 லட்சம் சேம்பிள்கள்
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,344 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 51,066 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 20 லட்சம் சேம்பிள்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளன.

டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் 50,055 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அது போல் இதுவரை 19,56,672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 3,010 ஆண்களுக்கும் 1,955 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

குணமாகியவர்கள்
இதுவரை 1,26,670 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று மட்டும் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். இதுவரை தமிழகத்தில் 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நாள்தோறும் 2000-த்தை தொட்ட கொரோனா அண்மைக்காலமாக 1500-க்கு கீழ் உள்ளது.

அதிகபட்ச இறப்பு
இன்று சென்னையில் 1130 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 88377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரையில் சென்னையில் அதிகபட்சமாக 1475 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள். தமிழகத்தை பொருத்தமட்டில் இன்று விருதுநகரில் 360 பேருக்கும் திருவள்ளூரில் 366 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும் செங்கல்பட்டில் 256 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications