தாம்பரம் ரயில் நிலையம் டூ நெல்லை போக இருந்த சுமார் ₹4 கோடி.. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா?
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, ஓட்டிற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று வழக்கம் போல பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு தற்பொழுது பண மூட்டையுடன் மாட்டி கொண்ட பாஜகவினர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி பணத்தை எடுத்து சென்றோமென கைதானவர்கள் வாக்குமூலம் என்று திமுக சார்பாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது, என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

என்ன நடந்தது? தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி ரயிலில் நெல்லை கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
கணக்கில் வராத இந்த பணத்தை எடுத்து சென்ற போது போலீஸ் சோதனையில் சிக்கியது.
என்ன நடந்தது?: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓட்டிற்கு பணம் கொடுக்க
— DMK IT WING (@DMKITwing) April 7, 2024
மாட்டேன் என்று வழக்கம்
போல பொய் மூட்டையை
அவிழ்த்துவிட்டு தற்பொழுது
பண மூட்டையுடன் மாட்டி
கொண்ட பாஜகவினர்.
நெல்லை பாஜக வேட்பாளர்
நயினார் நாகேந்திரனுக்காக
நான்கு கோடி பணத்தை
எடுத்து சென்றோமென
கைதானவர்கள் வாக்குமூலம் pic.twitter.com/3K6nrkASt1
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications