சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூசி தட்டப்படும் பைல்கள்.. அமலாக்கத்துறை ரேடாரில் 4 தமிழ்நாடு அமைச்சர்கள்.. டென்ஷனில் திமுக தலைகள்?

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை சேர்ந்த முக்கியமான நான்கு அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 4 அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் ரேடாரில் இருப்பதாகவும், 2 பேருக்கு இதில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து திமுக அரசு எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விசாரணைகளை நடத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை நடத்தி வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் ரெய்டுகளில் சிக்கி உள்ளனர்.

இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கு, ராஜேந்திர பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கு, ஜெயலலிதா மரண விசாரணை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அதிமுக தரப்பிற்கு எதிராக சென்று கொண்டு இருக்கின்றன. இப்படி அதிமுக தரப்பு பல வழக்குகள் மற்றும் விசாரணைகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் ஆளும் திமுக தரப்பிற்கும் அமலாக்கத்துறையில் இருந்து பிரஷர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் சிலருக்கு இனி நெருக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணியின் கருப்பு கொடி போராட்டம்.. ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணியின் கருப்பு கொடி போராட்டம்.. ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு

அமலாக்கத்துறை செக்

அமலாக்கத்துறை செக்

அமலாக்கத்துறை தரப்பு தமிழ்நாட்டின் நான்கு முக்கியமான அமைச்சர்களை குறி வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன் சொத்துகுவிப்பு புகார்களில் சிக்கியவர்களையும், தற்போது வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்களையும் அமலாக்கத்துறை தரப்பு குறி வைத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கீதா ஜீவன், செந்தில்பாலாஜி, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணையின் வலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி 33 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 2.8 கோடி ரூபாய் மோசடி செய்தாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தற்போது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையும் கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி இவருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது.

கீதா ஜீவன்

கீதா ஜீவன்

​மதுரை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கும் வகையில் செந்தில்பாலாஜி காரணங்களை குறிப்பிட்டு வருகிறார். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் ஏதாவது காரணம் சொல்லி அவகாசம் கேட்டு வருகிறார். இந்த நிலையில் விரைவில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை காய் நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் திமுக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சரான தூத்துக்குடியை சேர்ந்த கீதா ஜீவனுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை காய் நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பம்

குடும்பம்

இவருக்கு எதிராக அதிமுக ஆட்சியிலேயே இரண்டு முறை சொத்துகுவிப்பு புகார்கள் வைக்கப்பட்டன. 2010க்கு பின்பாக இவரின் சொத்து மதிப்பு உயர்ந்ததாக புகார் வைக்கப்பட்டது. ஏற்கனவே சொத்துகுவிப்பு வழக்கும் இவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. கீதா ஜீவன் மட்டுமின்றி அவரது கணவர் ஜீவன், தந்தை என்.பெரியசாமி, தாயார் எபனேசர், சகோதரர்கள் என்.பி.ராஜா, என்.பி.ஜெகன் ஆகியோர் மீதும் சொத்துகுவிப்பு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இவர் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இவரின் குடும்பத்தில் மொத்தம் 7 பேரை விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 1ம் தேதி வரை ஆஜராகும்படி பல்வேறு சம்மன்கள் இவரின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டது. 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார்.

கே. என் நேரு

கே. என் நேரு

அப்போது வருமானத்திற்கு அதிகமாக கிட்டத்தட்ட 5 கோடி வரை சொத்து சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டது. இவரின் குடும்ப உறுப்பினர்களும் கணக்கில் வராத சொத்துக்களை சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவருக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. விரைவில் தொடர் சம்மன்கள் அனுப்பப்பட்டு அவர் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபோக திமுக அமைச்சரவையில் 2006-11 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கே. என் நேரு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டது.

கே. என் நேரு வழக்கு

கே. என் நேரு வழக்கு

இதில் ஏற்கனவே கே. என் நேரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாலும், இதில் உச்ச நீதிமன்றம் வரை ஏற்கனவே அமலாக்கத்துறை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை இவருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு அஸ்திரத்தை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவருக்கு எதிரான பழைய ஆவணங்கள் தூசி தட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக தலைகள் கொஞ்சம் டென்ஷனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Senthil balaji, Anitha Radhakrishnan, Geetha Jeevan and K N Nehru; DMK Ministers unders the radar of Enforcement Directorate says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X