7 மாதமாக சுற்றலில் விட்ட ஆர்.கே. சுரேஷ்.. ஜவ்வு போல் இழுக்கும் 4 மணி நேர விசாரணை.. என்ன சொன்னார்?
சென்னை: சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரான ஆர்.கே.சுரேஷிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் அவர் துபாய் தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை காணவில்லை என ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் 7 மாதங்கள் கழித்து ஆர்.கே.சுகேஷ் சென்னை வந்துள்ளார்.
அவர் அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பி வேல்முருகன் முன்பு ஆஜராகியுள்ளார். அவர் ஆஜராக வந்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் தலைமறைவாக இல்லைங்க. விசாரணையை முடிச்சிட்டு வந்து பேசறேன் என உள்ளே சென்றார். 4 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா, வேறுி என்னென்னலாம் சொன்னார் என்பது தெரியவில்லை.
பின்னணி என்ன? சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இங்கு ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாத் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை பலரும் நம்பி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ 1,09,255 பேரிடம் ரூ 2,438 கோடி வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ 96 கோடி முடக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளி: மேலும் ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125 க்கும் மேற்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டன. இது ஒரு புறம் இருக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அவர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். மேலும் இன்டர்போல் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது.
சிக்கிய ராஜசேகர்: இந்த நிலையில் சர்வதேச போலீஸார் (இன்டர்போல்) உதவியுடன் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அபுதாபியில் கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் துபாயில் இருந்து சென்னை வந்தார். அவரிடம் நாளை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தவுள்ளது. இந்த நிலையில் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் துபாய் சென்றுள்ளனர். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் ராஜசேகரை அழைத்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications