Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணி மணியாக.. வந்து விழுந்த 4 ரேஷன் கார்டு அறிவிப்புகள்.. ஒவ்வொன்றும் முக்கியம்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மற்றும் கார்டு தொடர்பாக கடந்த சில நாட்களில் 4 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்புகள் என்னென்ன.. அதன் பயன்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

அறிவிப்பு 1: தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

tamil nadu government notification ration

இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

அறிவிப்பு 2: தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல். பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களால் சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் மாற்றுத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது 90% ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.

கருவிழி சரிபார்ப்பு முறை: வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும்.

வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும்.

அறிவிப்பு 3: ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு முக்கியமான ஒரு நல்ல பலன் கிடைத்துள்ளதாக ரேஷன் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு கடையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.. இனி மாவட்டங்களுக்கு குறைந்தது ஒரு கடை அல்லது 5 கடை என்ற ரீதியில் கொண்டு வரப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து.. பாக்கெட் மூலம் பொருட்களை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளனர்.

இதன் மூலம் ஏற்கனவே எடை பார்த்து பொருட்கள் பேக்கேஜ் செய்யப்படுவதால் எடை மாறுதல் இருக்காது. உள்ளூர் அளவில் ரேஷன் ஊழியர்கள் திருடமுடியாது. ரேஷன் திருட்டு தடுக்கப்படும். ரேஷன் எடை மாறுதல் பற்றி பல வருடங்களாக இருந்த புகார்கள், கோரிக்கைகள் எல்லாம் தற்போது இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.

அறிவிப்பு 4: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு மாற்றங்களை செய்யும் சூப்பர் வாய்ப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி ரேஷன் கார்டில் விலாசம் மாற்றுவதற்கான அசத்தலான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விபரங்களை ஆன்லைன் வழியாக வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.

பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml

வலது புறத்தில் நான் அடுத்து "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நான் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். எனது புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+