கிளாம்பாக்கத்தில் பிரச்சினையாவே இருக்கே! கிரில் சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சி, கூழ், களி என சத்தான உணவுகளை நம் முன்னோர்கள் செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். மேலும் சைவம் என்றால் காய்கறிகள், கீரைகளுடன் சாப்பிடும் வழக்கம் இருந்தது. நொறுக்குத் தீனிகள் என்றால் ஆவியில் வேக வைத்த உப்பு உருண்டை, கொழுக்கட்டை, இட்லி, சேவை, சுண்டல் உள்ளிட்டவைகள் பெரும்பாலும் அவர்கள் உண்டனர்.

அது போல் அசைவம் என எடுத்துக் கொண்டால் நாட்டுக் கோழி குழம்பு, ஏரி, ஆற்று மீன் குழம்பு உள்ளிட்டவைகள் பிரதானம் வகித்தன. ஆனால் தற்போது அப்படியில்லை. உணவு பழக்கவழக்கமே மாறிவிட்டது. பதப்படுத்தப்பட்டது, நீண்ட நாள்களுக்கு முன்பே பேக்கிங் செய்யப்பட்டது, அதிக மசாலா உணவுகள் இவற்றையே மக்கள் விரும்புகிறார்கள்.
மேலும் பிரைடு ரைஸ், சிக்கன் தந்தூரி, நூடுல்ஸ், ஷவர்மா உள்ளிட்ட அரேபிய நாட்டு உணவு வகைகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டினரோ சிலர் நம் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்கிறார்கள். நார்த் இந்தியன், சவுத் இந்தியனை விட அரேபிய , சைீஸ், தாய், பிரென்ஞ் உள்ளிட்ட உணவு வகைகளை உண்பதையே ஒருவிதமான கவுரவ பிரச்சினையாகவே பார்க்கிறார்கள்.
வீட்டுச் சாப்பாடு மாறி தற்போது ஹோட்டல் சாப்பாட்டையே விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்பி உணவுக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் சேர்த்து விலை கொடுத்து வருகிறார்கள். சில ஹோட்டல் நிர்வாகத்தினரும் காசுக்கு ஆசைப்பட்டு தரமற்ற உணவுகளை கொடுக்கிறார்கள். பின்னர் புகார் அளித்தால் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டும் நடவடிக்கைகளை பின்பற்றி கடையை மீண்டும் திறந்துவிடுகிறார்கள்.
அந்த வகையில் சென்னை ஊரப்பாக்கத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கார்பெண்டராக பணியாற்றும் மோகனும் அவருடைய மனைவி, இரு குழந்தைகளும் சென்றனர். அப்போது அவர்கள் அங்கு சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கன் ஆர்டர் செய்தனர். உணவு வந்ததும் சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர்கள் 4 பேருக்குமே வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளும் கூடுவாஞ்சேரி நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஹோட்டலில் உணவின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார்கள். கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிகிறது. இந்த கிளாம்பாக்கத்தில் நேற்று முன் தினம் சென்னையில் பெய்த மழையால் கடல் நீர் போல் தண்ணீர் தேங்கியிருந்தது.












Click it and Unblock the Notifications