4 பெரிய சவால்.. பீனிக்ஸாக எழப்போகும் தமிழ்நாடு.. பிடிஆருக்கு போன மெசேஜ்.. இதுதான் ஸ்டாலின் பிளானா?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஐடி துறை அமைச்சராக பதவி ஏற்று இருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு நிதி அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்தவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இரண்டு முழு பட்ஜெட், 1 பாதி பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் தமிழ்நாடு பொருளாதாரத்தை சரிவில் இருந்து வேகமாக மீட்டு எடுத்தார்.

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறையையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமளவில் சரி செய்தார். சமீபத்தில் பட்ஜெட் உரையில் கூட, திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2 வருட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருவாய் சீர்திருத்தங்கள்தான்.
முக்கியமாக வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை மாற்றம்:
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
டாஸ்க்:
தமிழ்நாட்டின் புதிய ஐடி துறை அமைச்சராக பதவி ஏற்று இருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அவருக்கு 4 முக்கியமான சவால்கள் உள்ளன.
சவால் 1- தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.
சவால் 2- 1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை பிடிஆர் ஏற்படுத்த வேண்டும்.
சவால் 3 - பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும்.
சவால் 4 - பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பணிகள்:
இதை எல்லாம் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் பிடிஆருக்கு இந்த முக்கிய துறையை கொடுத்து இருக்கிறாராம். அதோடு மிக முக்கியமாக தமிழ்நாட்டில் ஐடி துறையை பீனிக்ஸ் பறவையாக மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பிடிஆருக்கு நேற்றைய சந்திப்பில் உத்தரவிட்டு இருக்கிறாராம்.
டாஸ்க் 1 - ஐடி துறையில் தமிழ்நாடு அரசு மீண்டு வர வேண்டும் என்றால்.. அதற்கு பெரிய அளவில் அனுபவம், ஆலோசனை செய்ய, மார்க்கெட்டிங் செய்யும் திறன் கொண்டவர் வேண்டும். இனி தமிழ்நாட்டை ஐடி துறையின் மையமாக மாற்ற ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளாராம் .
டாஸ்க் 2 - அதோடு பின் டெக் துறையிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த உள்ளது. இதை பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம்.

டாஸ்க் 3- பிடிஆரை சந்தித்த முதல்வரும் ஐடி துறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். ஐடி துறையை தமிழ்நாடு கைவிட கூடாது. நிறைய மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறாராம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications