வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? திடீரென ஆர்என் ரவியை சந்தித்த இபிஎஸ்! 4 பரபர காரணங்கள்
சென்னை; ஆளுநர் ஆர். என் ரவியை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. திடீரென இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியல் கடந்த சில நாட்களாக ரோலர் கோஸ்டர் ரெய்டு செல்கிறது என்றுதான் கூற வேண்டும். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று கூறினார். இன்னொரு பக்கம் பாமக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பாஜக - காங்கிரஸ் உடன்தான் கூட்டணி, அதிமுக உடன் எல்லாம் கூட்டணி கிடையாது என்று டிடிவி தினகரன் இன்னொரு பக்கம் கூறினார். இப்படி தமிழ்நாட்டில் லோக்சபா கூட்டணி தொடர்பான விவாதங்கள் எழ தொடங்கி உள்ளன.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு இடையில்தான் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் முக்கியமான விஷயம் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு வாரம் முன் சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். இந்த நிலையில் அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. மாறாக அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதில் அமித் ஷாவை சாதித்த ஓ பன்னீர்செல்வம் அவருக்கு கை கொடுத்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

ஏன்
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமித் ஷாவை சந்திக்க ஏன் செல்லவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் பல்வேறு காரணங்கள், அரசியல்கள் இருப்பதாக கூறப்பட்டது.

அரசியல்
அதற்கு முதல்நாள்தான் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி ஓபிஎஸ், எடப்பாடி இருவரையும் ஒன்றாக சந்தித்தார். இவர்களுக்கு ஒன்றாக மரியாதையை கொடுத்தார். ஓ பன்னீர்செல்வமுடன் தன்னை சேர்த்து வைத்து ஒரே மாதிரி நடத்தியதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மறுநாள் அமித் ஷாவை அவர் சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதோடு பாஜக - அதிமுக கூட்டணி உடைய போகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டு வருகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் வர தொடங்கின.

கூட்டணி
அதாவது காங்கிரஸ் தலைவர்களுடன் எடப்பாடி சீக்ரெட்டாக பேசி வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் எடப்பாடி மீது சில பாஜக தலைவர்கள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வந்தன. இவை எல்லாம் உறுதி படுத்தப்படாத தகவல்கள்தான். இதற்கு இடையில்தான் தற்போது ஆளுநர் ஆர். என் ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இன்று பிற்பகல் 12.45 மணிக்கு இந்த சந்திப்பு தொடங்கி 1.10 வரை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடந்தது. 4 முக்கியமான விஷயங்கள் இந்த மீட்டிங்கில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.

4 விஷயங்கள்
அதன்படி தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து ரிப்போர்ட் ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கொடுத்துள்ளார். சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுக்கப்படவில்லை என்று எடப்பாடி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல் சீர்காழி வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் தரப்படவில்லை என்றும் எடப்பாடி புகார் அளித்துள்ளார். 3வதாக போதை பொருள் பயன்பாடு பற்றி இவர் புகார் அளித்தாக கூறப்படுகிறது. இது போக 4வது விஷயமாக.. அதிமுக - பாஜக உறவு குறித்து இன்று அவர் ஆலோசனை செய்த்தாக கூறப்படுகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications