11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக அடுத்தடுத்து சர்வே முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான முடிவுகள் திமுக அதிமுக இடையே 11 சதவிகிதம் வரை வாக்கு வித்தியாசம் இருப்பதாக கணித்துள்ளன.
பொதுவாக வாக்கு வித்தியசாம் 5-6 சதவிகிதத்தை தாண்டினாலே அது பெரிய வெற்றி. 11 சதவிகிதம் எல்லாம் வாக்கு வித்தியாசம் இருந்தால் அது ஸ்வீப் ஆக வாய்ப்பு உள்ளது. திமுக 200+ இடங்களை வென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று திமுக வட்டாரத்தினர் நம்புகிறார்களாம்.

தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், 'INSIDE ELECTION', போல் டிராக்கர் (Poll Tracker), லோக் போல் (Lok Poll) மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவாகவும் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வின்படி, திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு
இதன் விளைவாக, வரும் தேர்தலில் 159 முதல் 165 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெறும் 33% வாக்குகளை மட்டுமே பெற்று, 64 முதல் 70 தொகுதிகளுக்குள் சுருங்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மண்டலங்களில்கூட அக்கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்ற கணிப்பு, அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18% வாக்குகளைத் தன்வசப்படுத்தும் தவெக, 4 முதல் 6 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தவெக ஈர்க்கும் இந்த 18% வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால்,
அது அதிமுகவுக்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளது. அதே சமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் தொகுதிகள் எதுவும் கிடைக்காது (0 இடங்கள்) என இந்தக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுகவின் ஆதிக்கம் தொடர்வதும், அதிமுகவின் வாக்கு வங்கி சரிவைச் சந்திப்பதும், தவெக ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதும் 2026 தேர்தல் களத்தின் முக்கிய மாற்றங்களாக இருக்கும் என இன்சைட் எலெக்சன் சர்வே சுட்டிக்காட்டுகிறது.
லோக் போல் கணிப்பு: திமுக வெற்றி
லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.
தனிப்போர்: இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அக்னி நியூஸ் சர்வீஸ்: திமுக வெற்றி
அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.
கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.
மண்டல வாரியான 'கிளீன் ஸ்வீப்': - சென்னை: 37-ல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!
மத்திய மண்டலம்: 37-ல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.
கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50-ல் 32 இடங்களையும், வடக்கில் 52-ல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது. இதிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
போல் டிராக்கர்: 'உச்சாணிக் கொம்பில்' உதயசூரியன்!
போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே 'பஞ்ச்' வைக்கின்றன.
வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7% வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று இதிலும் கூறப்பட்டு உள்ளது.
-
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே! -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங்












Click it and Unblock the Notifications