"சிக்ஸர்" ஸ்டாலின்.. ரன் அவுட் ஆன புள்ளி... யார் அந்த "4 விஐபிகள்".. கொங்குவில் ஸ்டாலின் தந்த மெசேஜ்
கொங்கு மண்டல அதிமுகவுக்கு திமுக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய மெசேஜ் தந்துள்ளார்
சென்னை: ஸ்டாலின் எடுத்த அஸ்திரம், கொங்கு மண்டலத்தில் மிகச்சிறப்பாகவே வேலை செய்து வருவது, திமுகவுக்கு தெம்பை தந்து வருகிறது.. என்ன காரணம்?
அதிமுகவும் திமுகவும் தன்னை சாதிக்கு ஆதரவாகவும், ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை.. இதுவே அக்கட்சிகளின் ஆகச்சிறந்த பலமாக இருந்து வருகிறது..
இதில், கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும்.. இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

எம்ஜிஆர் போட்டோ
வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. இதற்கடுத்து முதலியார்கள்... அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. எனினும், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு என்பது அதிமுகவின் கோட்டை. ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் படத்தையும், கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம்.. அந்த அளவுக்கு எம்ஜிஆர் அந்த மக்களிடம் நெருங்கி இருந்தார்.

ஜெயலலிதா
எம்ஜிஆருக்கு பிறகுகூட, கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா.. இதற்கு பிறகு கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் ஆட்சி அமைய அப்போது முக்கிய காரணமாக இருந்தது... இதற்கு முன்புவரை கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் பிளஸ்ஸாக இருக்கிறது. கடந்த 1989-ல்அதிமுக இரண்டாகப் பிரிந்து களம் கண்டபோது, ஜெயலலிதா அணி வெற்றி பெற்ற 27 எம்எல்ஏக்களில், 17 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கருணாநிதி மகன்
அதன்பின், 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தவிர, கடைசியாக நடந்த 2016 தேர்தல் வரை அதிமுக கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாகவே மாற்றியுள்ளது. கடந்த 2011-ல் மொத்தமுள்ள 57 தொகுதிகளில், 45 தொகுதிகளையும், 2016-ல், 53 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது.இதைதவிர, கடந்த வருடங்களில் அதிமுக அரசு இந்த கொங்கு மண்டலத்துக்கு செய்த நலத்திட்டங்கள் ஏராளம்.. மிக மிக முக்கிய அமைச்சர்கள் 4 பேர் இதே கொங்குவில் இருந்ததால், சகல அறிவிப்புகளும் இந்த மண்டல மக்களை குளிர்வித்தபடியே இருந்ததை மறுக்க முடியாது.. அதனால்தான், திமுகவின் வெற்றி என்பது இங்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. கருணாநிதி இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்... வன்னியர்களுக்கும் எம்பிசிக்கு கொண்டு வந்தார்.. அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு செய்தார்... இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை..

கருணாநிதி
அப்படி இருந்தும் திமுகவால் அங்கு நிலையாக கால் ஊன்ற முடியவில்லை என்பது கவலைக்குரியது.. அதுமட்டுமல்ல, கடந்த முறையே திமுகதான் வென்று, ஆட்சியை கைப்பற்றியிருக்கக்கூடியது.. ஆனால், சொதப்பிவிட்டதே கொங்கு மண்டலம்தான்.. இந்த முறை பெரும்பான்மையான இடங்களை பிடிக்க முடியாமல் போனதுக்கும் இதே கொங்கு மண்டலம்தான் காரணமாக விளங்குகிறது.. அதிமுகவின் வாக்கு வங்கி மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.. கடந்த காலங்களில், கொங்கு மண்டலத்தில் கருணாநிதி எடுத்த சில தவறான முடிவுகளும், அரசியலும்கூட காரணமாக இருந்தன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

வெள்ளாள கவுண்டர்
எவ்வளவுதான் நலத்திட்டங்கள், வாக்குறுதிகள், அறிவிப்புகளை செய்தாலும், "வெள்ளாள கவுண்டர்" என்ற ஒரு புள்ளியை வைத்து, திமுகவை ஆட்டம் காண வைத்துவிட்டது அதிமுக கொங்கு மண்டலம்.. இந்த சூட்சுமத்தைதான் முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்தார்.. அதே சமுதாய புள்ளிகளை முன்வைத்து, திமுகவின் மைனஸ் பாயிண்ட்கள் அத்தனையும் நொறுக்க வியூகம் வகுத்தார்.. அதிமுகவின் கோட்டை என்று தெரிந்தும், பாஜகவின் ஆதரவு சார்ந்த இடம் என்று தெரிந்தும், திருமாவளவன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு 10 வருடத்துக்கு மேலாக கோபம் இருக்கிறது என்று தெரிந்தும், கொங்குவை கொக்கி போட்டு இழுக்க துணிந்தார்.

சிட்டிங் அமைச்சர்
அதற்காக 4 பேரை முன்னிறுத்தினார்.. செந்தில்பாலாஜி அதில் முக்கியமானவர்.. மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும் சரி, செந்தில் பாலாஜியும் சரி, அரசியல், பணபலம், சாதி பலம், என அனைத்திலுமே சரிக்கு சமமானவர்கள்.. தன்னைவிட வலிமை குறைந்தவரை வெல்வதைவிட, சரிக்கு சமமான பலமுடையவரை வெல்வதில்தான், ஒரு தலைவனின் அழகு பொதிந்துள்ளது.. அந்தவகையில், சிட்டிங் அமைச்சரை, வீழ்த்தி, கொங்குவில் முதல் நம்பிக்கையை செந்தில் பாலாஜி ஏற்படுத்தி தந்தார்.

வெள்ளக்கோயில் சாமிநாதன்
அடுத்து, முத்துசாமியை களமிறக்கினார் ஸ்டாலின்... அடுத்து சக்கரபாணியை களமிறக்கினார்.. அடுத்து வெள்ளக்கோயில் சாமிநாதனை களமிறக்கினார்.. இந்த 4 பேருமே வெள்ளாள கவுண்டர்கள்தான்.. இவர்களைதான் ஸ்டாலின் பெரிதும் நம்பி, கொங்கு திமுகவை ஒப்படைத்தார்.. இந்த 4 பேர் நாலாபக்கமும் சுழட்டி சுழட்டி அடித்ததாலேயே, இன்று எடப்பாடி பழனிசாமி கூடாரம் கொங்குவில் காலியாக துவங்கிவிட்டது. நேற்றைய தினம், அது நிரூபணமும் ஆகி உள்ளது..

ஜாதி பலம் + இந்துத்துவா
எடப்பாடியின் ஜாதி பலம் + பாஜகவின் இந்துத்துவம் + எல்.முருகனை எம்பியாக்கியது + கொங்குவை சேர்ந்த பாஜக தலைவர் = போன்றவை எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு பிளஸ்ஸாக இருந்தபோதிலும், ஒரே சூட்சுமத்தில் திமிறி எழுந்துவிட்டது இன்றைய திமுக. அதற்கு முக்கிய காரணம், இத்தனை காலமாக, கொங்குவை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்த கருணாநிதியாலும் முடியாத விஷயத்தை ஸ்டாலின் இன்று முடித்து காட்டி உள்ளார்.. அத்துடன், "உங்கள் நபர் எடப்பாடிக்கு பதிலாக, இதோ கொங்குவில் நாங்கள் இருக்கிறோம்" என்ற மெசேஜ்ஜை தந்து நம்பிக்கையை பறைசாற்றியுள்ளார் கருணாநிதி மகன் முக ஸ்டாலின்..!
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்












Click it and Unblock the Notifications