Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரெடியா இருங்க".. 400 + 10 ஆயிரம் ரூபாயாமே.. "அவங்களா".. போனை போட்டு மேட்டருக்கு வந்த எடப்பாடி.. ஓஹோ

எடப்பாடி பழனிசாமி அதிமுக கலைக்குழுவினருக்கு தீபாவளி பரிசு தந்தாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் உள்ள சிலருக்கு தீபாவளி பரிசு தந்துள்ளாராம்.. அதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, இவை இரண்டுமே தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அதிலும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மட்டும் கூடுதலாக விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. ஆனால், 2 அறிக்கைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து எந்தவித கருத்தையும் சொல்லாமல் உள்ளார்..

 டபுள் ரிப்போர்ட்கள்

டபுள் ரிப்போர்ட்கள்

இந்த 2 அறிக்கைகளில் எடப்பாடிக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி சம்பவ அறிக்கை என்கிறார்கள்.. அதனால்தான், இந்த விஷயம் தொடர்பாக மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசி, உதவியை நாடியதாகவும், ஆனால், இந்த விஷயத்திலும் தலைமை, எடப்பாடியை கைவிட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்தால் மட்டுமே, ஆதரவு சிக்னல் கிடைக்கும் என்பதையும் திட்டவட்டமாக சொல்லி விட்டதாக தெரிகிறது. இதனால், அப்செட்டில் உள்ள எடப்பாடி, தன்னுடைய லீகல் டீமுடன் சட்டரீதியான விஷயங்களை ஆலோசித்து வருகிறார்..

 1 2 3 கன்பியூஷன்

1 2 3 கன்பியூஷன்

மற்றொருபக்கம், சட்டரீதியான நெருக்கடிகளும், வழக்கு விசாரணைகளும் கூடிவருவதால், எடப்பாடி மிகப்பெரிய சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால், ஒருசில முக்கிய நிர்வாகிகள், ஓபிஎஸ் பக்கம் தூது அனுப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டாராம்.. "எத்தனையோ சிக்கல்கள் கூடிவந்தாலும், எனக்கு பெரிய பலமாக இருப்பதே நிர்வாகிகள் மட்டும்தான்.. இவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.. ஆனால், இவர்களே எனக்கு வருத்தத்தை உண்டுபண்ணினால் எப்படி?" என்று நெருக்கமானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி புலம்பி வருவதாகவும் தெரிகிறது.

 ஸ்பெஷல்லாக நியூஸ்

ஸ்பெஷல்லாக நியூஸ்

இந்நிலையில், மற்றொரு தகவல் கசிந்து வருகிறது.. அதன்படி, சில முக்கிய புள்ளிகளை ஸ்பெஷலாக கவனித்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அவர்கள் வேறு யாருமில்லை.. அதிமுக கலைக்குழுவினர்தான்.. ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் பேச்சாளர்களுக்கு ராஜ மரியாதை இருக்கும்... எப்போது தேர்தல் என்றாலும், இவர்களுக்காக பிரத்யேக அறிக்கை வெளியிட்டு, அவர்களை பேச்சாளர்களாக அறிவிப்பார்.. இது பலரது வாழ்வாதாரத்துக்கும் உதவியாக இருக்கும்.. அந்தவகையில், இவர்கள் தமிழகத்தின் எங்கோ ஒரு இடத்தில், அதிமுகவின் பெயரை உச்சரித்தபடியே, முழங்கி கொண்டுதான் இருப்பார்கள்..

 400 + 10,000

400 + 10,000

ஆனால், இப்போதெல்லாம் சோஷியல் மீடியாவிலேயே அரசியல் கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதிலும் ஐடி விங்குகள் ஒவ்வொரு கட்சிக்கும் செயல்பட ஆரம்பித்தபிறகு, இதுபோன்ற பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் காணாமலே போய்விட்டார்கள்.. இவர்களுக்குதான், எடப்பாடி பழனிசாமி சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. திடீரென தீபாவளிக்கு அதிமுக பேச்சாளர்கள், கலைக்குழுவினர் 400 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தீபாவளி கிஃப்ட் கொடுத்து அசத்தி விட்டாராம்...

 ஸ்டார் பேச்சாளர்

ஸ்டார் பேச்சாளர்

அதுமட்டுமல்ல, நட்சத்திரப் பேச்சாளர் சிலருக்கு, எடப்பாடியே போனை போட்டு பேசினாராம்.. "ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் சசிகலாவின் அரசியல் வாழ்வே முடிந்துவிட்டது.. ஓபிஎஸ்ஸும் மதிப்பில்லாமல் போய்விட்டார்.. எனவே, கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அம்மா காலத்தில் இருந்ததுபோலவே, அதிமுக குறித்து பிரதான பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது.. ரெடியா இருங்க" என்றாராம்.. இதையடுத்து, தேர்தலே இல்லாமல் புது பிரச்சாரம் ஒன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விரைவில் ஒலிக்க போகிறதாம்..!!

பிரபல நடிகர்

பிரபல நடிகர்

இதற்கு நடுவில், இதேபோல ஒரு பாணியைதான் ஓபிஎஸ் கடந்த மாதமே கையில் எடுப்பதாக தகவல்கள் கசிந்தன.. ஒரு பிரபல நடிகரை வைத்து, தென்மண்டலங்களில் பிரசாரம் செய்து, அந்த பிரசாரத்தில், எடப்பாடி மீதான குற்றச்சாட்டுகள் முதல் கோர்ட் கண்டித்தது வரை அனைத்தையும் மக்களிடம் எடுத்து செல்ல முனைவதாக செய்திகள் வந்தன.. அந்த பிரபல நடிகர் ஏற்கனவே அதிமுகவில் அங்கம் வகிப்பவர் என்றும், தென்மண்டல மக்களுக்கு பரிச்சயமானவர் என்றும் கூறப்பட்டது.. எனினும் பாஜக மேலிடத்தின் தொடர் அமைதியால் ஓபிஎஸ் இந்த விஷயத்தை ஆறப்போட்டு வருகிறாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+