“நைட்டுல உட்கார்ந்து எழுதிட்டு காலையில எழுந்து..” அண்ணாமலை பிரச்சாரத்தை கலாய்த்த இமான் அண்ணாச்சி!
சென்னை: பாஜகவினரின் 4 கோடி பிடிபட்ட நிலையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் கோவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என திமுக பேச்சாளர் இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமான் அண்ணாச்சி மக்கள் டிவியில் ஒளிபரப்பான கொஞ்சம் சேட்டை கொஞ்சம் அரட்டை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்னர் சன் நெட்வொர்க்கில் இணைந்து "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்றார். குட்டி சுட்டீஸ் என்ற பெயரிலும் நிகழ்ச்சி நடத்துகிறார் இமான் அண்ணாச்சி. 'ஹே.. மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!' என்ற டயலாக் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இமான் அண்ணாச்சி.

நெல்லைச் சீமை வட்டார வழக்கில் இமான் அண்ணாச்சி பேசுவது அனைவராலும் ரசிக்கப்படும். நீர்ப்பறவை, மரியான், புலி, கோலி சோடா, மெட்ராஸ், ஜில்லா, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இமான் அண்ணாச்சி. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சீசன் 5ல் பங்கேற்றிருந்தார் இமான் அண்ணாச்சி. 70 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தார் இமான் அண்ணாச்சி.
அரசியலில் இமான் அண்ணாச்சி: கடந்த 2016ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இமான் அண்ணாச்சி. 2016 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் பிரச்சாரம் செய்தார் இமான் அண்ணாச்சி. அதைத்தொடர்ந்து 2019 லோக்சபா தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் இந்த லோக்சபா தேர்தல் பிரச்சார களத்திலும் இறங்கியுள்ளார் இமான் அண்ணாச்சி. திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் இமான் அண்ணாச்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இமான் அண்ணாச்சியை பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் அவர் பிரச்சாரம் செய்யும் இடத்தில் கூட்டம் திரண்டு வருகிறது.
திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் அண்ணாச்சி: மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசிய இமான் அண்ணாச்சி, "இங்கு மக்கள் மத்தியில் ஒரு முக மலர்ச்சி இருக்கிறது. இந்த முக மலர்ச்சி இருக்கலாம், ஆனால் அந்த பூவோட மலர்ச்சி மட்டும் இங்க இருக்கக் கூடாது. நமக்கு ரிசல்ட் தெரிந்துவிட்டது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை விரட்டி அடித்து திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் தான் ஆட்சியைப் பிடிக்கும். காங்கிரஸ் நமக்கு சித்தப்பா, பெரியப்பா மாதிரி. நமக்கு என்ன தேவை என்றாலும் உடனே செய்து தருவார்கள். கண்டிப்பாக இந்த முறை காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்" என்று பேசினார்.
நைட்டு எழுதுனத காலையில் ஒப்பிப்பார் அண்ணாமலை: தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே தொலைக்காட்சிக்கும் பேட்டி அளித்துள்ளார் இமான் அண்ணாச்சி. அப்போது பேசியுள்ள இமான் அண்ணாச்சி, "தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணிக்குத்தான் மிக மிக சாதகமாக இந்த தேர்தல் களம் இருக்கிறது.
அண்ணாமலையின் தேர்தல் பிரசாரம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த இமான் அண்ணாச்சி, "அண்ணாமலை நைட்டுல எழுதி வைத்ததை காலையில் ஒப்பிக்கிறார். அவர் பேசின பல விஷயங்கள் பொய் என்று திமுகவினர் கண்டுபிடித்து கூறி வருகிறார்கள். மக்களே அவர் சொல்லும் விஷயங்கள் உண்மை இல்லை என பின்னாடியே கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கோவை நோக்கி 4 ஆயிரம் கோடி: நேற்று நாலு கோடி எடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் இல்லை என்கிறார்கள். இப்போது ஒரு முக்கியமான தகவலை சொல்கிறேன். நேற்று 4 கோடியை பிடித்தது போல, வேறு ஒரு வழியில் கோவை நோக்கி 4 ஆயிரம் கோடி சென்று கொண்டிருக்கிறது. உடனே போய் பிடியுங்கள்" என்றார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்துவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த இமான் அண்ணாச்சி, "ரோட்டுக்கு வந்தாச்சுல. இனி ரோடு ஷா தான் நடத்தணும். அதுவும் கொஞ்ச நால் தான். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு எங்குமே ரோடு ஷோ பண்ண முடியாது, எல்லாம் வெளிநாட்டுக்கு போய் தான் பண்ணனும்." என விமர்சித்துள்ளார் இமான் அண்ணாச்சி.
-
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications