நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கும் பிரபல தமிழ் பட நடிகை?.. ரகசியமாக கைலாசாவுக்கு பயணமா?
சென்னை: கைலாசா தீவில் உள்ள நித்யானந்தாவை சந்திக்க 42 வயதாகும் பிரபல தமிழ் பட நடிகையும் அடிக்கடி சென்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எப்படி கைலாசாவுக்கு போகிறார் என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நித்யானந்தா திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கி குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நாடு எப்படி இருக்கிறது, எந்த கண்டத்தில் இருக்கிறது என்பது குறித்தெல்லாம் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

நித்யானந்தா
இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தன்னை சுற்றி ஏராளமான மருத்துவர்கள் இருப்பதாக நித்யானந்தா பெயரில் ஒரு பேஸ்புக் பதிவு வெளியானது. அவர் தியான நிலையில் இருப்பதாகவும் மூச்சு பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

உடல் வலிமை
இதுகுறித்த பதிவுகளும் சில நாட்கள் வந்தன. அதன் பிறகு காணவில்லை. நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது உடல் வலிமைப் பெற எடுத்து கொண்ட மாத்திரைகளே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நரம்பு பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரிகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை ரஞ்சிதா
நித்யானந்தாவை நடிகை ரஞ்சிதாவும் அவரது முன்னணி சீடர்கள் குழுவினரும் பார்த்து கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில் நித்யானந்தா திருவண்ணாமலை வர அடம் பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சீடர்கள் முயற்சிப்பதாகவும் ஆனால் வந்தால் நித்யானந்தாவை போலீஸார் கைது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகை
நிலைமை இப்படியிருக்க, நித்யானந்தாவை பிரபல நடிகை ஒருவர் அடிக்கடி கைலாசாவுக்கு சென்று சந்தித்து வருவதாக தெரிகிறது. 42 வயதாகும் அந்த நடிகை விஜய், முரளி உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். 1990-களில் கதாநாயகியாக நடித்தவர். இவர் ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார். அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 42 வயதாகும் இவருக்கு இன்னமும் திருமணம் ஆக வில்லை.

யார் அந்த நடிகை
இவர் நித்யானந்தாவின் தீவிர பக்தை என கூறப்படுகிறது. நித்யானந்தாவுக்கு பல நடிகைகளுடன் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமாக ரஞ்சிதாவை மட்டும் பெரும்பாலானோருக்கு தெரியும். தற்போது அந்த வரிசையில் 42 வயது நடிகையும் சேர்ந்துவிட்டார். இந்த நடிகை உண்மையிலேயே கைலாசாவுக்கு செல்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அப்படியே சென்றாலும் அவர் எப்படி செல்கிறார் என்பது தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications