ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது" என தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், துறை சார்ந்து அமைச்சர்களுக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் 'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இதையடுத்து, அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தெரிவித்தார்.

cabinet

அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். முதல்வர் விஜய் இது குறித்து அறிவுறுத்தினார்.

அதில் இளைஞர்கள் மேம்பாடு, முன்னேற்றம், மகளிர் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சம் இல்லாத நல்லாட்சி, போதை இல்லாத தமிழகம் என அனைத்துத் துறைகளுக்கும் தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் வகுத்துக் கொடுத்துள்ளார்.

37 திட்டங்களை துறை சார்ந்த அமைச்சர்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுவிலக்கு தீர்வைக்கு 30 திட்டங்கள், வேளாண் துறைக்கு 27 திட்டங்கள், கால்நடை, மீன்வளம் பால்வளத் துறைக்கு 27 திட்டங்கள் என மொத்தம் 436 திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களையும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து, தற்போது 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குட்கா, போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+