சென்னையில் 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!.. டிஸ்சார்ஜிலும் கலக்கல்!
சென்னை: சென்னையில் 4764 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4647 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதாவது மருத்துவமனைக்கு வந்தவர்களை போல் 100 சதவீதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.
இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 4764 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை
இன்று ஒரே நாளில் 4647 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,661 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். இதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் பலியாகிவிட்டனர்.

ஈரோடு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கும் செங்கல்பட்டில் 1219 பேருக்கும் சென்னையில் 4764 பேருக்கும் கோவையில் 963 பேருக்கும் கடலூரில் 218 பேருக்கும் தருமபுரியில் 196 பேருக்கும், திண்டுக்கல்லில் 233 பேருக்கும் ஈரோட்டில் 457 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
காஞ்சிபுரத்தில் 443 பேருக்கும் கன்னியாகுமரியில் 242 பேருக்கும் திருவள்ளூரில் 751 பேருக்கும் திருவண்ணாமலையில் 197 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5485 பேருக்கும் செங்கல்பட்டில் 77483 பேருக்கும் கோவையில் 76259 பேருக்கும் சென்னையில் 323452 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வயது
12 வயதுக்குட்பட்டவர்களில் 20175 ஆண்களுக்கும் 20719 பெண்களுக்கும் என 40894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 முதல் 60 வயதுடையோரில் 563424 ஆண்களும் 368419 பெண்களும் 60 வயதை கடந்தோரில் 98920 ஆண்களுக்கும் 58472 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications