49 சீட் பாஜகவுக்கு.. 23 பாமகவுக்கு..131-ல் அதிமுக.. மீதி யாருக்கு? அமித் ஷா போட்ட மெகா ஸ்கெட்ச்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்புகளையும் வியூகங்களையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி பரபரப்புகள் மறுபுறம் ஓடிக் கொண்டிருக்கின்றன... இந்நிலையில், அதிமுக - கூட்டணிக்குள் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது..!!!

அதிமுக - பாஜக கூட்டணி வலிமையடைந்தவாறே உள்ளது.. எனினும், எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா சமாதானப்படுத்தி, சிதறிக்கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது..

டெல்லி போட்ட கணக்கு

பாஜக எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு முக்கியமான அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனக் கணிக்கப்படுகிறது... அதாவது ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் ஒருங்கிணைப்பதன் மூலம் வாக்குகளின் சிதறலை தடுத்து, பலமான ஒரு கூட்டணியை உருவாக்க டெல்லி தலைமை விரும்புகிறதாம்..

அதேபோல இந்த கூட்டணியின் பலத்தை பெருக்க, கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இணக்கத்தை உறுதிப்படுத்த ராஜ்ய சபா இடங்கள் ஒரு துருப்பு சீட்டாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

அதாவது அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு மாநிலங்களவை இடங்களை உறுதி செய்வதன் மூலம், தேர்தல் களத்தில் அவர்களின் முழு ஒத்துழைப்பை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இதில் அன்புமணிக்கான இடத்தை அதிமுகவும், தினகரனுக்கான இடத்தை வட மாநிலம் ஒன்றின் வழியாக பாஜகவும் வழங்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது..

இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து, தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சிகள் செயல்பட தொடங்கும் சூழல் உருவாகும் என்று பாஜக மேலிடம் நம்புகிறதாம். ..

உத்தேச சீட் விவரங்கள்

அதேபோல அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த உத்தேச விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த 80 தொகுதிகளில், பாஜக நேரடியாக 49 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.

எஞ்சிய இடங்களை பாஜக தனது ஆதரவு அமைப்புகளுக்கும், கூட்டணித் தலைவர்களுக்கும் பிரித்து வழங்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் 14 இடங்கள் கோரப்பட்ட நிலையில், அவர்களுக்கு 10 முதல் 12 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம்..

அதேபோல், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு 6 இடங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களான ஜி.கே. வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர் மற்றும் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு மீதமுள்ள இடங்கள் பிரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக 243, அதிமுக 131

மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான பாமக அன்புமணிக்கு அதிமுக தனது பங்கிலிருந்து 23 தொகுதிகளை ஒதுக்கும் எனத் தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடுகள் போக, மீதமுள்ள 131 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம்..

இந்த வியூகம் சரியாக செயல்படும் பட்சத்தில், வரும் தேர்தல் களம் ஆளுங்கட்சிக்குக் கடும் சவாலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் உறுதியாகும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகாரப் போட்டி அரங்கேறப்போவது உறுதி. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+