இனி தமிழ் படிப்பது ரொம்ப ஈஸி! ‘சொற்கள்’ புதிய இணையதளம் அறிமுகம்: மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் தமிழ் மொழியை ஆர்வத்துடனும் மிக எளிய முறையிலும் கற்றுக்கொள்வதற்காக சொற்கள் என்ற புதிய தமிழ் கற்றல் இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது.

இன்றைய இணைய யுகத்தில் பள்ளி மாணவர்கள் முதல் தமிழ் மொழியைப் புதிதாகக் கற்க விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மிக விரைவில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

Learn Tamil Easily

இத்தளத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

ஒவ்வொரு மாணவருக்கும் கற்கும் திறன் வெவ்வேறாக இருக்கும். சிலர் விரைவாகப் படித்துப் புரிந்து கொள்வார்கள்; சிலருக்குப் பொறுமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே எளிதில் புரியும். இதனை மனதில் கொண்டு, அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் எளிய பாடங்கள், பயிற்சிகள் மற்றும் சுவாரசியமான அம்சங்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொடக்க விழாவின் போது, இந்த இணையதளத்தை உருவாக்கிய ஆசிரியர் மற்றும் குழுவினர் நேரடியாகக் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கவுள்ளனர். இணையதளத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன, கடினமான சொற்களை மாணவர்கள் எப்படிச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம், வெவ்வேறு கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு இது எப்படி உதவும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.

Learn Tamil Easily

முன்பதிவு அவசியம்:

இந்நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இருக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இணையவழியில் முன்பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.

எனவே, தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிமையாகக் கொண்டு சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் உடனே தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கூடுதல் தகவல்களுக்கும் உடனடிப் பதிவுக்கும் அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+