சென்னை எழும்பூரில் புதிய வழித்தடம் .. பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தோடு நிறுத்தம்.. ரயில்வே விளக்கம்
சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் , வைகை எக்ஸ்பிரஸ் ரயில், புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில், திருநெல்வேலி ரயில், ராமேசுவரம் ரயில் உள்பட அனைத்து தென்மாவட்ட ரயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் வகையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்குடியில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12606) நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகுதி நேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல, மன்னார்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16180) வருகிற 8-ந் தேதி பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12632) 8-ந் தேதி பகுதிநேரமாக செங்கல்பட்டு-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், மண்டபத்தில் இருந்து மாலை 5.55 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752, 22662) பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (12694) 8-ந் தேதி பகுதிநேரமாக மாம்பலம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், புதுச்சேரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் பயணிகள் ரயில் பகுதிநேரமாக தாம்பரம்-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) நாளை மற்றும் நாளை மறுநாள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். அதே போல, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759) 9-ந் தேதி தாம்பரத்திற்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22661) 9-ந் தேதி எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17644) 8-ந் தேதி கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. அதே தேதியில், காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (17652) மேல்பாக்கம், காஞ்சிபுரம், வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20665) நாளை மற்றும் நாளை மறுநாள் 15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் மதியம் 3 மணிக்கு புறப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications