Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை புரட்டி போட்ட.. மிக்ஜாம் புயல் வெள்ளம்! ரூ.6000 நிவாரணம் கேட்கும் 5.5 லட்சம் பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை முகவரியில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால், சென்னையில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஒரே நாளில் ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பொழிந்ததுதான். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது.

5.5 lakh people have applied for relief due to Cyclone Michaung rains

இதுதான் பெரும் வெள்ளத்திற்கு காரணம். வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது. இந்நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரண நிதியானது ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சென்னையில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கான ரேஷன் அட்டை, அவர்களுடைய சொந்த மாவட்டத்தின் முகவரியில்தான் இருக்கும். ஆனால் சென்னையில் நீண்ட காலமாக வசிப்பதால் இவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே இவர்களுக்கு நிவாரணம் எப்படி வழங்கப்படும்? என்று கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதாவது, வெளி மாவட்டங்களை சேர்ந்தோருக்கு ரேசன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால், உரிய ஆய்வுக்கு பின்னர் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த படிவங்கள் வழங்கி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவை பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.6000 நிவாரணம் கேட்டு ரேசன் கார்டு இல்லாதோர் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+